வீடு தேடி ரேஷன் பொருள்கள்; மம்தா அதிரடி! மகிழ்ச்சியில் மேற்குவங்க மக்கள்;

இந்தியாவில் மிகக்குறைந்த விலைக்கு ஏழை,எளிய மக்களுக்கு பயனளிக்கும் வகையில் காணப்படுவது நியாய விலை கடை. நியாய விலை கடை குறித்து ஒவ்வொரு மாநில அரசும் புதுப்புது அறிக்கைகளை கூறிக் கொண்டே வருகின்றன.

மம்தா பானர்ஜி

அதன்படி சில மாதங்களுக்கு முன்பு டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீடுகளுக்கு வந்து ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் முறையை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.

இந்நிலையில் இத்திட்டத்தை மேற்கு வங்க முதல்வர் செயல்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.மேற்கு வங்க மாநிலத்தில் 3வது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுள்ள மம்தா பானர்ஜி இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை கூறியுள்ளார்.

அதன்படி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வீடு தேடி வரும்  ரேஷன் பொருட்களை வினியோகிக்கப்படும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த அதிரடி திட்டத்தை செயல்படுத்தி அதன் மூலம் பொது மக்களின் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்களை வினியோகிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment