வங்கிக்கணக்கு இல்லாத ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

வங்கிக்கணக்கு இல்லாத ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

சமீபத்தில் தமிழக அரசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டும் என்றும் வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு கூட்டுறவு வங்கியில் கணக்கு தொடங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது வங்கி கணக்கு இல்லாத ரேஷன் அட்டைதாரர்களின் பட்டியல் அந்தந்த ரேஷன் கடைகளில் ஒட்டப்பட்டுள்ளது என்றும் அதை பார்த்து அந்த பட்டியலில் உள்ளவர்கள் தங்களுக்கு வங்கி கணக்கு இருந்தால் அதனை உடனே உடனே ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்றும் ஒருவேளை வங்கிக்கணக்கு இல்லாதவர்கள் தகவல் அளித்தால் கூட்டுறவு வங்கியில் வங்கிக் கணக்கு தொடங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்கி கணக்கு இல்லாத ரேஷன் அட்டைதாரர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த பட்டியல் தற்போது ரேஷன் கடையில் கொடுத்துள்ளதாகவும் ஆதார் எண்ணை இணைக்காத ரேஷன் கார்டுதாரர்கள் இருந்தால் அவர்களுடைய வீடுகளுக்கே சென்று வங்கி கணக்கு மற்றும் ஆதார் எண்ணை பெற்று இணைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் ஜீரோ பேலன்ஸ் வங்கி கணக்கு தொடங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி ரேஷன் கடை பணியாளர்கள் தற்போது வீடு வீடாக சென்று வங்கி கணக்குடன் ஆதார் அட்டையை இணைக்கும் பட்டியலை எடுத்து வருகின்றனர். மேலும் வங்கி கணக்கு இல்லாத ரேஷன் அட்டைதாரர்களின் பட்டியல் எடுக்கும் பணி கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாக கூறப்படுகிறது.

தமிழகம் முழுவதும் 14 லட்சத்து 84 ஆயிரம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கு இல்லை என்ற தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து வங்கிக் கணக்கு இல்லாத ரேஷன் அட்டைதாரர்கள் உடனடியாக ரேஷன் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கூட்டுறவு வங்கியில் வங்கிக் கணக்கை தொடங்க ஏற்பாடு செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.