அடக்கொடுமையே!! ரேஷன் அரிசியில் எலி குஞ்சுகள்… கண்டுகொள்ளுமா அரசு?

நம் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. குறிப்பாக குடும்ப தலைவிகள் பயன்பெரும் வகையில் ரேஷன் கடைகளில் தரமான பொருட்களை வழங்கி வருகிறது.

இருப்பினும் அதிகாரிகளில் கவன குறைவால் ஆங்காங்கே சில குளறுபடிகளால் தவறுகள் நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அடுத்த பாலசமுத்திரம் என்ற பகுதியில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது.

உண்ணாவிரம்! ஆந்திர முதல்வரின் சகோதரிக்கு உடல்நலக்குறைவு..!!

இந்த கடைக்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அரிசி, சர்க்கரை, பாமாயில், பருப்பு உள்ளிட்ட பொருட்களை மலிவான விலையில் வாங்கி செல்கின்றனர். அந்த வகையில் இன்று மோகன் என்பவர் ரேஷன் அரிசி வாங்கியுள்ளார்.

அப்போது 4-க்கும் மேற்பட்ட எலி குஞ்சுகள் இருப்பதை கண்டு அரிசியை தரையில் கொட்டி ரேசன் கடை விநியோகஸ்தரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதாக தெரிகிறது.

அடுத்த 3 மணி நேரம்.. இந்த மாவட்டங்களில் மழை பெய்யும்..?

அதே சமயம் ஊர் மக்கள் அனைவரும் ரேசன் கடை விநியோகஸ்தரிடம் கேட்டதால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், ஏழை மக்கள் சாப்பிடும் அரிசியை சுகாரதாரமற்ற முறையில் வைத்திருப்பதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.