மதிய உணவில் கிடந்த எலி,பல்லி: அதிர்ச்சியில் பெற்றோர்கள்!!

மேற்கு வங்கத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் இறந்த எலி மற்றும் பல்லி கிடந்தது பரபரப்பை கிளப்பியுள்ளது.

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமும் காங்கிரஸ் ஆட்சி நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தில் அரசு மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவு சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

பாஸ்மதி அரிசியில் இதை சேர்க்க தடை: எதற்கு தெரியுமா?

அந்த வகையில் மால்டா மாவட்டம் சஹுர்காச்சி பித்யானந்தபுர் ஆரம்ப பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் எலி மற்றும் பல்லி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனை கண்டித்து அப்பகுதியில் இருக்கும் மக்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். அதே போல் பலமுறை இதுதொடர்பாக புகார் கொடுத்தும் எந்தவித பயனும் இல்லையென அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை வேரோடு அழிப்பதே அரசின் நோக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

ஏற்கனவே குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட உணவில் பாம்பு இறந்துகிடந்ததால் 30-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.