90’ஸ் கிட்ஸ் பேவரெட்… இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் மரணம்!

90’ஸ் கிட்ஸ்களின் பேவரேட் பானமான ரஸ்னாவின் நிறுவனத் தலைவரான அரீஸ் பிரோஜ்ஷா கம்பட்டா, மாரடைப்பு காரணமாக அகமதாபாத்தில் காலமானார்.

நீண்ட காலமாக நோயால் அவதிப்பட்டு வந்த 85 வயதான தொழிலதிபர் அரீஸ் பிரோஜ்ஷா கம்பட்டா சிகிச்சை பலனின்ஸி, நவம்பர் 19 அன்று காலமானதாக ரஸ்னா நிறுவனம் அறிவித்துள்ளது.

அரீஸ் பிரோஜ்ஷா கம்பட்டா குடும்பத்தில், அவரது மனைவி பெர்சிஸ் மற்றும் குழந்தைகள் பிருஸ், டெல்னா மற்றும் ருசான், அவரது மருமகள் பினாய்ஷா மற்றும் பேரக்குழந்தைகள் அர்சீன், அர்சாத், அவான், அரீஸ், ஃபிரோசா மற்றும் அர்னாவாஸ் ஆகியோர் உள்ளனர்.

அரீஸ் பிரோஜ்ஷா கம்பட்டாவின் தந்தை ஃபிரோஜா கம்பட்டா சாதாரண வணிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து தந்தையின் வணிகத்தை கையில் எடுத்த இது அரீஸ் 60 க்கும் மேற்பட்ட நாடுகளில் முன்னிலையில் உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளராக ரஸ்னா நிறுவனத்தைக் கொண்டு வந்தார்.

அதிக விலைக்கு விற்கப்படும் குளிர்பானப் பொருட்களுக்கு மாற்றாக 1970களில் மலிவு விலையில் ரஸ்னாவின் குளிர்பானப் பவுடரை உருவாக்கினார். இது நாட்டில் 1.8 மில்லியன் சில்லறை விற்பனை நிலையங்களில் விற்கப்படுகிறது. 80கள் மற்றும் 90களின் விளம்பரத்தில் இடம் பிடித்த “ஐ லவ் யூ ரஸ்னா” என்ற வாசகம் இன்னும் மக்கள் மனதில் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது.

5 ரூபாய்க்கு ஒரு பேக் ரஸ்னாவை 32 கிளாஸ் குளிர்பானங்களாக மாற்றலாம், ஒரு கிளாஸ் ஒன்றுக்கு வெறும் 15 பைசா மட்டுமே செலவாகும் போன்ற யுக்திகள் ரஸ்னாவிற்கான ரசிகர்களை அதிகரித்தது. ரஸ்னா ஒன்பது உற்பத்தி ஆலைகள் மற்றும் இந்தியா முழுவதும் 26 டிப்போக்கள், 200 சூப்பர் ஸ்டாக்கிஸ்டுகள், 5,000 ஸ்டாக்கிஸ்டுகள், 900 விற்பனையாளர்களுடன் 1.6 மில்லியன் விற்பனை நிலையங்களைக் கொண்ட வலுவான விநியோக சங்கிலியைக் கொண்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.