இன்றைய ராசி பலன் – 28 அக்டோபர் 2020!

36396089a6a8f2ba47d1ab3500e3f8b4

மேஷம்:
புதியாக எடுக்கும் முயற்சிகளில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வியாபாரம் தொடர்பாக உற்சாகமாக இருப்பீர்கள். வீட்டில் உள்ளோருடன் பிரச்சினைகள் வாக்கு வாதங்கள் ஏற்பட்டு பிரச்சினை முற்றலாம், வெளியூர்ப் பயணங்களால் அலைச்சல் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்படுவதாக உணர்வீர்கள். எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படும். பழைய கடன்கள் வசூலாகும்.

ரிஷபம்:
உங்களை மகிழ்விக்கும் வகையில் எதிர்பாராத பணவரவுகள் கிடைக்கப் பெறும். உடன் பிறப்புகள் நிச்சயம் உதவிகரமாக இருப்பார்கள். கிடைக்கப் பெறும்,  இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். குடும்பத்தில் அனைவருடனும் அன்பு பாராட்டுவீர்கள், வேலையில் மந்த நிலை ஏற்படும். 

மிதுனம்:
பிள்ளைகளால் கணவன்-மனைவி இடையே சண்டையானது ஏற்படும், குழந்தைகள் உங்களுக்குப் பெருமை சேர்க்கும் விதமாக நடந்து கொள்வர். வீட்டில் மன மகிழ்ச்சி தரும் விஷயங்களை எதிர்பார்க்கலாம். பொருளாதார நிலை மந்தமாக இருப்பதால் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. வெளியூர்ப் பயணங்கள் நன்மையினைக் கொடுக்கும். பிரச்சினைகளைத் தவிர்க்க பொறுமையுடன் இருத்தல் நல்லது.

கடகம்:
உடல் ஆரோக்கியம் மேம்பட்டுக் காணப்படும். பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை தோன்றும். குடும்பத்தில் மன மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். திருமண பேச்சுவார்த்தைகளில் வெற்றிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். பிள்ளைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

சிம்மம்
குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் சரியாகும். வெளியூர் பயணங்களில் வீண் பிரச்சினைகள் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகளால் செலவுகள் ஏற்பட்டாலும் சுப செய்தி தேடி வரும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகளால் பண நெருக்கடியினை சந்திப்பீர்கள்.

கன்னி
பிள்ளைகள் பெற்றோர்களுடன் அன்பு பாராட்டுவார்கள், பொன், பொருள், மனை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள், புதிதாக எதிலும் முதலீடுகள் செய்வதைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் சக பணியாளர்களுடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்தல் சிறந்தது. குடும்பத்தில் வீண் செலவுகள் பண்டிகை காலம் என்பதால் அதிகமாக இருக்கும். 

துலாம்
வியாபாரத்தில் லாபம் மிகச் சிறப்பாக இருக்கும், பிள்ளைகளின் மூலம் வீண் செலவுகள் ஏற்படலாம். எடுக்கும் காரியத்தை உற்சாகத்தோடு செய்து, வெற்றியினைப் பெறுவீர்கள். வீட்டில் உள்ளவர்களுடன் கூடுதல் அன்பாக நடந்து கொள்வீர்கள். சுப காரிய செயல்களில் தாமதம் ஏற்படும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

விருச்சிகம்
குடும்பத்தில் அதிக பணவரவினை ஒட்டி சுப செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் ஏற்படும் எதிர்பாராத செலவுகள் நிச்சயம் ஏற்படும், நண்பர்கள்மூலம் உதவிகள் கிடைக்கப் பெறும். பண நெருக்கடியினைத் தவிர்க்க சிக்கன விஷயத்தில் தீவிரமாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் கவனமாக இருத்தல் வேண்டும்.

தனுசு
உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் சரியாகி பழைய நிலைக்குத் திரும்புவீர்கள். தொழில்ரீதியாக லாபம் கிடைக்கும், வியாபாரம் ரீதியாக எந்தவொரு முடிவினையும் எடுக்காமல் இருத்தல் வேண்டும். புதிய வேலைவாய்ப்புகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். எதிர்பாராத செலவுகளை சமாளிக்க முன் கூட்டிய திட்டமிடுதல் அவசியம். 

மகரம்
வெளியூர்ப் பயணங்கலால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும், உறவினர்கள் எதிர்பாராத வகையாக திடீரென வீட்டிற்கு வருகை தருவார்கள், குடும்பத்தில் அனைவரும் விட்டுக் கொடுத்து செல்வது முக்கியம். சுப காரியங்களுக்காக கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுவீர்கள். வியாபாரத்தை அபிவிருத்தி செய்வது குறித்து யோசிப்பீர்கள்.

கும்பம்
வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் அமையப் பெறும், குடும்பத்தில் பழைய பிரச்சினைகளை ஒரு வழியாக முடிவுக்கு கொண்டு வருவீர்கள். உடல் ஆரோக்கியம் மிகச் சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே அன்பு அதிகரிக்கும், சுப காரிய முயற்சிகளில் சிறப்பான முடிவுகள் கிடைக்கப் பெறும். நண்பர்களின் உதவிகள் கிடைக்கப் பெறும். பூர்வீக சொத்துக்கள் திரும்பக் கிடைக்கும். 

மீனம்
குடும்பத்தில் ஒற்றுமையானது அதிகமாக இருக்கும். பிள்ளைகளின் உடல் நலத்தில் கவனம் தேவை, புதியதாகத் துவங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய வேலை வாய்ப்புகள் அமையப் பெறும். உங்களின் குடும்பத்தில் மகிழ்ச்சியானது நிச்சயம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பெரிய அளவிலான நஷ்டங்கள் ஏற்படும். மருத்துவ செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print