இன்றைய ராசி பலன் – 23 அக்டோபர் 2020!

68477f1f59481966e075f2440b5aeba6-1

மேஷம்
நண்பர்களுடன் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். குடும்பத்தில் மன நிம்மதி சற்று குறையும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் அன்பு மற்றும் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கப் பெறும். வீட்டில் இருப்போர்களுடன் பேசும்போது நிதானமாக செயல்படுவது நல்லது. வேலையில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். 

ரிஷபம் 
பணவரவு மிகச் சிறப்பாக இருக்கும். உடன்பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். உடல் நலம் எதிர்பார்த்த அளவில் இல்லாமல் சுமாராகவே இருக்கும்.  சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். சுப காரியங்களில் இருந்த மறைமுக விஷயங்களைக் கடப்பீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை பலப்படும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

மிதுனம் 
பணவரவு அதிக அளவில் இருப்பதால் வீண் செலவுகளை செய்வீர்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் செலுத்துவதல் அவசியம்.  உடன்பிறந்தவர்கள் மூலம் உதவி கிடைக்கும். குடும்பத்தினருடன் வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் வியாபாரத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்லுதல் வேண்டும்.
கடகம் 
அலுவலகத்தில் உற்சாகமாக வேலை செய்வீர்கள். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்ப வாழ்க்கை மகிச்சி தருவதாக இருக்கப் பெறும். உத்தியோகத்தில் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். நண்பர்களால் பொருளாதாரம் மேம்படும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிட்டும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியாக இருப்பதாக உணர்வீர்கள். 

சிம்மம் 
பொருளாதார அளவில் சீராக இருப்பீர்கள். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். பணம் கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருத்தல் அவசியம். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். பூர்விக சொத்துகள் கிடைத்ததால் வீட்டில் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். கடன் பிரச்சினைகள் ஓரளவு தீரும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். 

கன்னி 
வாழ்க்கைத்துணை மிகவும் அன்பாக நடந்து கொள்வார்கள். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தைரியத்துடன் புதிய காரியங்களை செய்வீர்கள். தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வீண் செலவை குறைத்து சேமிப்பை அதிகரிப்பீர்கள். பிள்ளைகள் தம் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். எந்தவொரு செயலையும் செய்யும் முன்பு சிந்தித்துச் செயல்படுதல் நல்லது.

துலாம் 
பொருளாதார நிலை சுமாரான நிலையில் இருக்கும்,  குடும்பத்தோடு வெளியூர் பயணத்திற்குத் திட்டமிடுவீர்கள். புது முயற்சிகள் மகிழ்ச்சி தரும் முடிவுகளைத் தரும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வீண் பயத்தை தவிர்த்தால் மட்டுமே மிகப் பெரும் வெற்றியினை நோக்கி பயணிக்க முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் வேலைபளு குறையும். 

விருச்சிகம் 
உடல் நலம் மற்றும் பொருளாதார நிலை இரண்டுமே எதிர்பார்த்த அளவில் இருக்காது. மற்றவர்களிடம் தேவை இல்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். பொன் பொருட்சேர்க்கையில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். 

தனுசு 
கணவன் மனைவி இடையே நிச்சயம் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது, தொழில் சார்ந்த முதலீடுகளில் நிதானமாக செயல்படுவது நல்லது. புதிய பொருட்கள் வாங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிப்பது குறித்து திட்டமிடுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். 

மகரம் 
குடும்பத்தில் வியக்க வைக்கும் இனிய சம்பவங்கள் நடைபெறும். தேவையற்ற விஷயங்களில் தலையிட்டால் பெரும் பிரச்சினைகளில் மாட்டிக் கொள்ள வேண்டியது இருக்கும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். பல மாதங்கள் கழித்து ஆலய தரிசனம் செய்வீர்கள். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை தரும். பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்கி நற்பெயர் பெற்றுத் தருவார்கள். குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். 

கும்பம் 
அலுவலகத்தில் பணிச்சுமை இருப்பதாக உணர்வீர்கள், எதையும் செய்வதற்கு முன் சிந்தித்து செயல்படுவது நல்லது. இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரம் ரீதியாக கூட்டாளிகளுடன் கவனமான அணுகுமுறை இருத்தல் வேண்டும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான முடிவுகள் கிடைக்கும். 

மீனம் 
வெளியூர் பயணங்கள் மிகச் சிறப்பானதாக அமையப் பெறும், வீட்டில் பிரச்சினைகள் அதிகரிக்கும். இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் உள்ள மந்த நிலை நீங்கும். உறவினர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண நெருக்கடிகள் ஓரளவு விலகும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment