Connect with us

இன்றைய ராசி பலன் – 21 அக்டோபர் 2020!

Rasipalan

இன்றைய ராசி பலன் – 21 அக்டோபர் 2020!

ef4830021412bcc385e3dfb5ac295214

மேஷம்:
பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் நிச்சயம் கிடைக்கப் பெறும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும் என்றாலும் செலவுகளும் அதிகரிக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் வீண் பிரச்சினைகளை வரலாம். சிந்தித்து செயல்பட்டால் தொழில் விருத்திக்காக போட்ட திட்டங்கள் வெற்றியை அளிக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. 

ரிஷபம்
புதிதாக துவக்கும் எந்தவொரு வேலைகளிலும் உற்சாகத்தோடு இருப்பீர்கள். உடன் பிறப்புகள் உதவியாக இருப்பார்கள். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் தடங்கலை ஏற்படுத்தும். 

மிதுனம்
உடன் பிறந்தோர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். இன்று வேலையில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். உங்களுடைய பழைய கடன் பிரச்சினைகளை தீர்வுக்கு கொண்டுவர முழு முயற்சியுடன் செயல்படுவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை தோன்றும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். 

கடகம்
வரவுக்கு மீறிய செலவுகளை எதிர்பார்க்கலாம். அலுவலகத்தில் இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். நண்பர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உற்றார் உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீண் செலவுகளைத் தவிர்த்து சிக்கனமாக இருப்பது நல்லது.

சிம்மம்
மனதளவில் பிரச்சினைகளால் மன நிம்மதி இழந்து காணப்படுவீர்கள், தொழிலில் இருந்த தடைகள் நீங்கும். குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் கிட்டும். புதியத் தொழிலைத் துவக்க அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை அதிகரிக்கும். 

கன்னி
உடல் நிலையில் சோர்வினை நிச்சயம் சந்திப்பீர்கள், தொழிலில் இருந்த எதிரிகளின் தொல்லை குறைந்து முன்னேற்றம் ஏற்படும். பணவரவும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள். இன்று குடும்பத்தில் அசையா சொத்து வழியில் செலவுகள் ஏற்படும். வீண் பயணங்களை தவிர்க்கவும். 

துலாம்
உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் உயர் பதவிகள் கிடைக்ககூடிய வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் ஒற்றுமையானது அதிகரிக்கும். தொழில் வியாபார ரீதியாக வெளிமாநில தொடர்பு ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். இன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் நல்ல செய்திகள் வரும். வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.

விருச்சிகம்
உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். சம்பளப் பணத்தில் முடிந்த அளவு சிக்கனமாக பணத்தை செலவழித்தல் வேண்டும்.   திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.  ஆலய தரிசனம் உங்களுக்கு மகிழ்ச்சியினைக் கொடுப்பதாக இருக்கும்.

தனுசு
குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். இன்று இனிய செய்திகள் வந்து இல்லத்தை மகிழ்விக்கும். வேலை செய்யும் இடத்தில் மற்ற ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்துச் செல்லுதல் நல்லது.

மகரம்
உங்களுக்கு பணவரவு மிகச் சிறப்பான அளவில் இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப் பலன்கள் கிட்டும். நீண்ட நாட்களாக வசூலாகாத கடன்கள் வசூலாகும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் உதவிகள் கிடைக்கும். திருமண பேச்சு வார்த்தைகளில் சாதகமான பலன் கிடைக்கும். 

கும்பம்
உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சிதரும் சம்பவங்கள் நடக்கப் பெறும், வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். திருமண பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். இன்று நீங்கள் வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினை தீரும்.  

மீனம்
புதிதாகத் துவங்கும் வேலைகளில் தடங்கல்கள் ஏற்படும். எந்த வேலையையும் புது பொலிவுடனும், தெம்புடனும் செய்து முடிப்பீர்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுதல் வேண்டும்.  நல்லது. உத்தியோகத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மற்றவர்களை நம்பி புதிய முயற்சிகளில் இறங்காதீர்கள்.
 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top