Connect with us

இன்றைய ராசி பலன் – 20 அக்டோபர் 2020!

Rasipalan

இன்றைய ராசி பலன் – 20 அக்டோபர் 2020!

06a278474f4b9e0e3ec62dac4a4a3467

மேஷம் 
வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணவரவு ஒரு பக்கம் வந்தாலும் குடும்பத்தில் எதிர்பாராத வீண் செலவுகள் செய்ய நேரிடும். சுபமுயற்சிகளில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட சிறப்பான பலன்கள் கிடைக்கப் பெறும். வேலையில் உடனிருப்பவர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். 

ரிஷபம் 
தொழில் வியாபாரத்தில் குறிப்பிடத்தக்க புதிய விஷயங்களை செய்வீர்கள்.  நீங்கள் எந்த செயலிலும் புது உற்சாகத்தோடு இருப்பீர்கள். வேலைவாய்ப்பு ரீதியாக சுப செய்திகளை எதிர்பார்க்கலாம். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும். மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உடன் பிறந்தவர்களுடன் இருந்த பிரச்சினைகள் சரியாகும்.

மிதுனம் 
அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வியாபார ரீதியாக லாபம் பெரிய அளவில் இருக்கும். உங்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும்.  பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தேடி வரும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.  

கடகம் 
புதிதாக எடுக்கும் முயற்சிகள் சிறப்பான முடிவுகளைத் தரும்.  வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். உடல் நலத்தில் கவனம் செலுத்தவும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். கடன்கள் அடைபடும் அளவிற்கு பணம் வரும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். 

சிம்மம் 
புதிதாகத் துவங்கும் காரியங்கள் பெரிய அளவிலான தடைகளைச் சந்திக்கும். குடும்பத்தில் பண வரவு தாராளமாக இருக்கப் பெறும், வேலையில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படலாம். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். 

கன்னி 
அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து செல்லுதல் நன்மை பயக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று குறையும். குடும்பத்தில் ஏற்படும் தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்குவீர்கள், மனைவி வழி உறவினர்களால் மூலம் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும்.

துலாம் 
குடும்பத்தில் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறும். குடும்பத்தினருடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் வரலாம். கவனம். உடன்பிறப்புகள் வழியாக கிடைக்கப் பெறும் நற் செய்திகளால் மகிழ்ச்சியாக உணர்வீர்கள்.

விருச்சிகம் 
உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை பலப்படும். சொந்த பந்தங்களினால் நன்மைகள் நடக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் இருப்பதாக உணர்வீர்கள். கணவன் மனைவி இடையே பிரச்சினை வரலாம். 

தனுசு

வியாபாரம் சம்பந்தமாக வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்வீர்கள், ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். சுபகாரியங்களில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள்ரீதியாக  பண உதவிகள் வந்து சேரும். ஆடம்பர பொருட் சேர்க்கை அதிகமாகும். பணவரவு சிறப்பாக இருக்கும்

மகரம் 
பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பெற்றோரின் உடல் நலத்தில் கூடுதல் கவனம் தேவை, உறவினர்கள் மத்தியில் இருந்த மனஸ்தாபங்கள் காணாமல் போகும். தொழில்ரீதியாக பதவி உயர்வு தேடி வரும். பூர்வீக சொத்துக்கள் திரும்பக் கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். 

கும்பம் 

வியாபாரத்தில் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவீர்கள். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புண்டு, தொழிலில் கூட்டாளிகளுடன் மனக்கசப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். உறவினர்கள் வழியில் குடும்பத்தில் வீண் செலவுகள் உண்டாகும்.

மீனம் 

குடும்பத்தில் கணவன் மனைவியிடையே சண்டைகள் குறைந்து சமரசம் ஏற்படும். சுபகாரியங்களை துவக்குவதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றம் ஏற்படும். தொழில்ரீதியான விஷயங்களிலும் அடுத்த கட்டத்தினை நோக்கிப் பயணிப்பீர்கள். 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top