Connect with us

இன்றைய ராசி பலன் – 19 அக்டோபர் 2020!

Rasipalan

இன்றைய ராசி பலன் – 19 அக்டோபர் 2020!

8c299ca0e1e1d59bca3220c3273ace86

மேஷம் 
புதிதாகத் துவங்கும் வேலைகளில் தாமதங்கள் ஏற்படும். தேவையில்லாத செலவுகளால் கடன்கள் வாங்குவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுங்கள். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது நல்லது. 

ரிஷபம் 
அலுவலகத்தில் அதிக அளவு வேலைப்பளு இருப்பதாக உணர்வீர்கள், எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். தேவையற்ற பயணங்களால் உடல் மற்றும் மன ரீதியாக சோர்வாக உணர்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். வீட்டில் இருப்போருடன் கோபம் கொள்ளாமல்  அனுசரித்து செல்வது நல்லது.

மிதுனம் 
வீட்டில் பெரிய அளவில் மகிழ்ச்சி தரும் விஷயங்கள் நடக்கப் பெறும்.  அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். உடன்பிறந்தவர்கள் மூலம் நன்மைகள் தேடி வரும். பணவரவு இன்று சுமாராக இருக்கும். வீட்டில் வேலைப்பளு குறைந்துள்ளதாக உணர்வீர்கள். செலவுகளைக் கட்டுப்படுத்தவும். கடன்கள் வசூலாகும்.

கடகம் 
குடும்பத்தில் திடீர் பணவரவுகளை எதிர்பார்க்கலாம். ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் நல்லது. உடன்பிறந்தவர்களுடன் அன்பு அதிகரித்து ஒற்றுமையும் அதிகரிக்கும். முன்பு கொடுத்த கடன்கள் வசூலாகும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். 
புதிய முயற்சிகளையும் முதலீடுகளையும் தவிர்ப்பது நல்லது.  

சிம்மம் 
வீட்டில் விரைய செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. உங்களுக்கு மனதில் அமைதி பிறக்கும். வீட்டில் உள்ளோருடன் கோபம் கொள்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகள் வரலாம் . வேலை செய்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும் சுபகாரிய முயற்சிகளில் தாமதத்திற்கு பின் வெற்றிகளை எதிர்பாக்கலாம். 

கன்னி 
நீண்ட தூரப் பயணங்களால் மனதளவில் மிகவும் உற்சாகமாக இருப்பதாக உணர்வீர்கள். வீட்டில் இருந்து வேலை செய்பவர்கள் வேலையில் மேலதிகாரிகளிடம் தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் சிறப்பானதாக இருக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.

துலாம் 
பிள்ளைகளால் மருத்துவ செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். வீட்டில் இருப்பவர்களை அனுசரித்து செல்லுதல் பல பிரச்சினைகளைத் தவிர்க்க உதவும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.  உங்களின் நிதி நிலைமை அற்புதமாக இருக்கும். சுபகாரியம் நடைபெறுவதில் இருந்த தடை தாமதங்கள் நீங்கும். 

விருச்சிகம் 
எதிர்பாராத இடத்தில் இருந்து பண வருமானம் வரும். நீண்ட கால முயற்சிகளுக்கு மிகச் சிறந்த வெற்றிகள் கிடைக்கும்.கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகையை முதலீடு செய்ய வேண்டாம். இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்களின் வருகையால் சந்தோஷம் கூடும்வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.

தனுசு 
வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலமான பலன்கள் இருக்கச் செய்யும். புதிய முயற்சிகளில் தாமதநிலை உண்டாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். பணத்தை சிக்கனமாக செலவு செய்யவில்லை எனில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாவீர்கள். வேலைபளு அதிகமாக இருப்பதாக உணர்வீர்கள்.

மகரம் 
உறவினர்கள் வருகையால் உற்சாகம் அதிகமாகவே இருக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். வேலை செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் வரலாம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.

கும்பம் 
குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். மனக்குழப்பங்கள் ஏற்படும். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வீட்டில் இருப்பவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். கடன் பிரச்சினை தீரும்.

மீனம் 

நிதி நிலைமை அற்புதமாக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த பிரச்சினைகள் குறையும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறும். நண்பர்களினால் உதவி கிடைக்கும். இன்றைய தினம் உங்களுடைய வேலையை உற்சாகமாக செய்வீர்கள். கொடுத்த கடன்கள் திரும்பக் கிடைக்கப் பெறும். 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top