Connect with us

இன்றைய ராசி பலன் – 18 அக்டோபர் 2020!

Rasipalan

இன்றைய ராசி பலன் – 18 அக்டோபர் 2020!

d79f429e32ac0f8a27c580ebd5504d04

மேஷம்
மன உளைச்சலில் நிச்சயம் அதிகமாக இருக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் தேடி வரும். வெளியூர்ப் பயணங்களால் உடல் ரீதியாக அசதியாக உணர்வீர்கள். பேசும் போது மிகவும் கவனமாக இருத்தல் நல்லது. வருமானம் குறைவாக இருக்கும், பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கச் செய்தல் வேண்டும்.

ரிஷபம்
உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியானது நிச்சயம் ஏற்பட வாய்ப்புண்டு. கொடுத்த கடனை வசூலிக்க முடியாமல் கஷ்டப்படுவீர்கள். பூர்விகச் சொத்து பிரச்சனைகள் தீரும். புதிதாக வேலை தேடும் பணியில் மும்முரமாக ஈடுபடுவீர்கள். 

மிதுனம்
குழந்தைகளால் மருத்துவ செலவுகள் ஏற்படும். வேலைவாய்ப்பு ரீதியாக புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கப் பெறும். பண வரவுகள் இருக்கும், பழைய கடன் பாக்கிகள் வசூல் ஆகும். வியாபாரத்தில் முந்தைய மாதங்களைவிட லாபம் வரும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய சொத்துக்கள் வாங்குவது குறித்த முடிவுகளை எடுப்பீர்கள்.

கடகம்
எந்த செயலையும் ஆர்வமாகவும் உற்சாகத்துடனும் செய்வீர்கள். கடன் பிரச்சனைகளைத் தீர்க்கும் வகையில் பொருளாதார அளவில் சிறந்து விளங்குவீர்கள். பெண்கள் பிறந்த வீட்டாருடன் மிகவும் நெருக்கமாக இருப்பதாக உணர்வீர்கள். பொருளாதார ரீதியாக இருந்த நெருக்கடிகள் குறைந்து நிம்மதி ஏற்படும். 

சிம்மம்
ஆடம்பர பொருட்கள் வாங்கி கையில் இருக்கும் பணத்தைக் கரைப்பீர்கள். பல ஆண்டுகளாக நினைத்த காரியம் நிறைவேறி மகிழ்ச்சியின் உச்சத்திற்கு செல்வீர்கள். பழைய பிரச்சினைகள் சமரசத்தில் முடிவடையும். பொருளாதார நிலையில் தடுமாறினாலும் மகிழ்ச்சியில் குறை இருக்காது. திருமண பேச்சுவார்த்தைகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். 

கன்னி
பணவரவுகள் இருக்கும் அளவு செலவுகள் நிச்சயம் இருக்கும். பேச்சில் கவனம் தேவை. வியாபாரத்தில் பெரிய அளவில் நஷ்டத்தினை சந்திப்பீர்கள்.  வரும்  உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று குறையும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகலை நயமாகப் பேசி முடிவுக்கு கொண்டு வருதல் வேண்டும். 

துலாம்
குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்த சம்பவங்களை எதிர்பார்க்கலாம். குல தெய்வ கோயிலுக்குச் சென்று பூஜைகள், பரிகாரங்கள் செய்து வருவீர்கள். குடும்பத்தில் சுபசெலவுகள் தேடி வரும். உடல் நிலையில் மந்தநிலை இருப்பதாக உணர்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.

விருச்சிகம்
உடன் பிறந்தவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பழைய நண்பர்கலை எதிர்பாராத விதமாக சந்திப்பீர்கள். பூர்விகச் சொத்து ரீதியாக பங்காளிகளுடன் பிரச்சினைகள் ஏற்படும், பொறுமையுடன் கையாள்தல் அவசியம். குடும்பத்தில் பெரியவர்களின் அன்பும் ஆசியும் கிடைக்கும். திடீர் மருத்துவ செலவுகள் ஏற்படும். 

தனுசு
குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பிறரை நம்பி எந்த காரியத்திலும் ஈடுபடாமல் இருப்பது உத்தமம். வெளியூர் பயணங்கள் அனுகூலங்களைக் கொடுக்கும். மேலும் மேலதிகாரிகளின் பாராட்டினைப் பெறுவீர்கள், வீண் வாக்குவாதங்கள் விபரீதத்துடன் முடிவடையும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். 

மகரம்
நிதானமாக யோசித்து முடிவு எடுத்து செயல்பட்டால் மட்டுமே பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் சற்று கவனமாக இருப்பது நல்லது. உடன் பிறந்தவர்களுடன் பணம், பொருள்ரீதியாக பிரச்சினைகள் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய கடின உழைப்பு தேவை. வேலை பார்ப்பவர்களுக்கு பெரிய அளவில் உடலளவில் சோர்வாக இருக்கும்.

கும்பம்
பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.  பெண்கள் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். உங்க குடும்பத்தில் வரவினை மிஞ்சிய செலவுகள் வரும். கடன் பிரச்சினை தீரும். பெண்களுக்கு வேலைபளு குறையும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். 

மீனம்
பணவரவு தாராளமாக இருக்கும். வேலையில் உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பயணங்களால் நன்மைகள் நடைபெறும். குழந்தைகள் மூலம் பெருமை தரும் விஷயங்கள் நடைபெறும். எதிர்பாராத பணவரவு வீடு தேடி வரும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும், பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும்.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top