Connect with us

இன்றைய ராசி பலன் – 17 அக்டோபர் 2020!

Rasipalan

இன்றைய ராசி பலன் – 17 அக்டோபர் 2020!

db678ded3113ebe850deeff9ba634f57

மேஷம்:
கணவன் மனைவி இடையே அன்பானது அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய அளவிலான வேலை வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். உங்களுக்கு பண வரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். கடன் பிரச்சினைகள் தீரும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி அடைய கூடிய புதிய வாய்ப்புகள் உருவாகும். 

ரிஷபம்:
கோபம் கொள்ளாமல் எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. உங்களுக்கு மன அமைதி குறையும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். உடல் நலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அக்கறை காட்டுவது நல்லது.  வீண் பேச்சுக்களை தவிர்க்கவும்.

மிதுனம்
உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும், சுப முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும்.  மேலும் வேலை தேடுவோருக்கு மிகவும் சிறந்த நாளாக இருக்கும், குடும்பத்தில் உள்ளவர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பணவரவு சுமாராக இருக்கும். 

கடகம்
உடல் நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் உங்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்திகள் தேடி வரும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். இன்று நீங்கள் எந்த செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். திருமண சுப காரியங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பழைய கடன்கள் வசூலாகும்.

சிம்மம்
பணம் வருமானம் அதிகரிப்பதால் எதிர்கால சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். பொன், பொருள் வாங்குவதற்கான யோகம் இருக்கும். தொழில் ரீதியான பயணங்களால் மிகச் சிறந்த அனுகூலப் பயன்கள் கிடைக்கப் பெறும். மேலும் தொழில்ரீதியாக புதிய முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.  நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். 

கன்னி
குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை கூடும். வெளியூர்ப் பயணங்கள் உடலில் பிரச்சினையினை ஏற்படுத்தும்,  உறவினர்கள் வழியாக மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடக்கப் பெறும். வேலையில் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள். 

துலாம்
நிதி நிலைமை மிகச் சுமாரான அளவிலேயே இருக்கும். வீண் செலவுகளால் குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த பிரச்சினைகள் குறையும். உடன் பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வேலை வாய்ப்பு ரீதியாக பதவி உயர்வு, சம்பள உயர்வு என மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடக்கப் பெறும்.

விருச்சிகம்
குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் வீண் விரயங்கள் ஏற்படலாம். வேலை விசயமாக செல்லும் வெளியூர் பயணங்களால் நன்மை ஏற்படும். வரவுக்கேற்ற செலவு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது.

தனுசு
வியாபாரத்தில் பண வருமானம் அதிகரிக்கும். சுப காரிய பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். உடன் பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். வேலையில் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் உள்ள பிரச்சினை குறையும். சகோதரர்களால் சந்தோஷம் அதிகரிக்கும்.

மகரம்
உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். இன்று வேலையில் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். சிக்கனமாக செலவு செய்வதன் மூலம் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம்.  பண வரவு இன்று தாராளமாக இருக்கும். தொழிலில் ஓரளவு லாபத்தினை எதிர்பார்க்கலாம்.

கும்பம்
தொழில் ரீதியாக மந்த நிலை இருப்பதாக உணர்வீர்கள்.  உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகலாம். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகமாகும். உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். தொழிலில் அதிக அளவில் இன்று முதலீடு செய்ய வேண்டாம்.

மீனம்
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.  குடும்பத்தில் பணவரவு சிறப்பான அளவில் இருக்கும். குல தெய்வக் கோயில்களுக்கு சென்று வழிபட்டு வந்தால் அனைத்துப் பிரச்சினைகளும் முடிவுக்கு வரும். நீண்ட தூரப் பயணங்கள் மனதில் மகிழ்ச்சியினை அதிகரிக்கச் செய்யும்,

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top