Connect with us

புஷ்பா 2 வில் காதலியாக இல்லாமல் மனைவியாக களமிறங்கும் ராஷ்மிகா! வெளியான அப்டேட் !

maxresdefault 19

பொழுதுபோக்கு

புஷ்பா 2 வில் காதலியாக இல்லாமல் மனைவியாக களமிறங்கும் ராஷ்மிகா! வெளியான அப்டேட் !

தெலுங்கு மொழியில் கடந்த ஆண்டு 17 டிசம்பர் 2021ல் வெளியான அதிரடி பரபரப்புத் திரைப்படம் தான் புஷ்பா.இந்தப் படத்தில், அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்க பகத் பாசில் தெலுங்கில் அறிமுகமாகி வில்லனாக நடித்திருப்பார், ராஷ்மிகா மந்தண்ணா ஹீரோயினாக நடித்திருப்பார் .

இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் தெலுங்கிலும், மலையாளம், தமிழ், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நிலையில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் உருவாக தயாராகி வருகிறது. முதல்பாகத்தை விட இன்னும் பிரம்மாண்டமாய் அதிரடி ஆக்க்ஷன் உடன் கூடிய அசத்தலான கதையில் இந்த படம் தயாராக உள்ளது.

Pushpa the rule part 2 1024x576 1 1 1 2

இரண்டாம் பாகத்தில் அல்லு அர்ஜுன், பகத் பாசில் இருவருக்கிடையிலான மோதல் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.தற்போழுது ராஷ்மிகா விஜய்யுடன் வாரிசு,ஹிந்தியில் குட்பை, மிஷன் மஜ்னு, அனிமல் என மூன்று படங்களில் நடித்து வருகிறார்.

a0d824b1d69d3f401c749b80a190fbdb original

சமீபத்தில் அமிதாப்பச்சனுடன் இணைந்து குட் பை படத்தில் நடித்து அடுத்த மாதம் 7ம் தேதி திரைக்கு வரையுள்ளதால் தற்போது அப்படத்தின் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் ராஷ்மிகா. அப்போது அளித்த பேட்டியில் அல்லு அர்ஜுனுடன் நடிக்க இருக்கும் புஷ்பா- 2 படம் குறித்த ஒரு தகவல் வெளியிட்டுள்ளார்.

விஜய் – அஜித் ரசிகர்களை ஆட்டத்தால் தன் பக்கம் இழுக்கும் தமன்னா ! வைரல் வீடியோ !

அதில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடிக்கும் புஷ்பா- 2 படத்தின் வேலைகளை இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்க போகிறேன். எனது கேரியரில் ஒரு முக்கியமான படமாக புஷ்பா அமைந்தது. அதனால் புஷ்பா-2 படத்தில் நடிப்பதில் கூடுதல் ஆர்வமாக இருப்பதாக கூறுகிறார். இந்த இரண்டாம் பாகத்தில் அல்லு அர்ஜுனின் மனைவி ஸ்ரீவள்ளியாக நடிக்கிறேன் என தெரிவித்துள்ளார் ராஷ்மிகா மந்தனா.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top