Connect with us

தனக்கு தானே ஆப்பு வைத்துக்கொண்ட ராஷ்மிகா.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்!!..

RashmikaMandanna 1

பொழுதுபோக்கு

தனக்கு தானே ஆப்பு வைத்துக்கொண்ட ராஷ்மிகா.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்!!..

தமிழ் சினிமாவில் சமீபத்தில் இளைஞர்களின் கிரஷ்ஷாக இருந்து வருபவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் அந்த அழகுக்கும், இவரின் ரியக்ஷனுக்கு மயங்காத ரசிகர்களே கிடையாது. இவர் கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதிலிருந்து தமிழ் இளைஞர்களின் கிரஷ்ஷாக இருந்து வருகிறார்.

RashmikaMandanna

பொதுவாக நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வந்து பல திரைப்பட வாய்ப்பைகளை கைவசம் வைத்துள்ளார்.ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும்.

rashmika mandanna vijay thalapathy 66 1200

தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் தளபதி விஜயுடன் முதன்முதலாக இணைவது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை உருவாக்கியது.ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

db39869509c0992748c1b31bac4fd2f9 1

அதன் படி அவர் போட்ட பதிவு என்னவென்றால் என்னுடைய பெயர் ராஷ்மிகா மந்தனா என்று நீளமாக இருக்கிறது ஆகையால் சுருக்கமாக நீங்கள் ரஷ் என்று அழைத்து கொள்ளலாம் என கூறியுள்ளார். இவ்வாறு நீங்கள் அழைத்தால் நான் எதுவும் நினைக்க மாட்டேன் என்பதையும் அந்த பதிவில் சேர்ந்து பதிவிட்டு உள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் அவர் போட்ட பதிவை கிண்டல் செய்யும் வகையில் பிரஷ், கிரஷ் வார்த்தைகளை கொட்டித் தீர்த்து கிண்டலடித்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top