டாக்டரை சந்தித்து சிகிச்சை பெரும் ராஷ்மிகா! என்ன ஆச்சுன்னு அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நடிகை ராஷ்மிகா தென்னிந்திய சினிமாவை தொடர்ந்து பாலிவுட்டிலும் கால்பதித்து மிக பிஸியான நடிகையாக வலம் வருகிறார். ராஷ்மிகா விஜய்யுடன் வாரிசு,ஹிந்தியில் குட்பை, மிஷன் மஜ்னு, அனிமல் என மூன்று படங்களில் நடித்து வருகிறார்.

இரண்டாவது பாலிவுட் படமான அமிதாப்பச்சனுடன் இணைந்து குட் பை படத்தில் நடித்து அடுத்த மாதம் 7ம் தேதி திரைக்கு வரையுள்ளதால் தற்போது அப்படத்தின் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் ராஷ்மிகா.

rashmika mandanna pink saree look photos main

அல்லு அர்ஜுனுடன் நடிக்க இருக்கும் புஷ்பா- 2 படத்தில் அல்லு அர்ஜுனின் மனைவி ஸ்ரீவள்ளியாக நடிக்கிறேன் என தெரிவித்துள்ளார் ராஷ்மிகா மந்தனா.மேலும் அந்த படத்திற்கு தனது சம்பளத்தை 4கோடியில் இருந்து 5 கோடியாக உயர்த்தியுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே முழங்கால் வலியால் அவதிப்பட்டு வருகிறார் ராஷ்மிகா. இதைத்தொடர்ந்து விஜயவாடாவில் உள்ள பிரபல மூட்டுவலி சிகிச்சை நிபுணர் டாக்டர் கவுரவ் ரெட்டியை சந்தித்து சிகிச்சை பெற்று வருகிறார் ராஷ்மிகா.

ஜெயிலர் படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்த முக்கிய நபர்! ரஜினியுடன் வெளியான புகைப்படம்!

மேலும் ராஷ்மிகாவை தொடர்ந்து அடுத்ததாக தோள்பட்டை வலியுடன் அல்லு அர்ஜுனும் விரைவில் என்னிடம் வருவார் என எதிர்பார்க்கிறேன்” என நகைச்சுவையாக கூறியுள்ளார் டாக்டர் கவுரவ் ரெட்டி. ராஷ்மிகா விரைவில் குணமாகி வர அவரது ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment