Connect with us

விஜய் தேவரகொண்டாவிற்கு ஃபயர் எமோஜி அனுப்பிய ரஷ்மிகா மந்தனா!

vijay 1659102825197 1659102825419 1659102825419

பொழுதுபோக்கு

விஜய் தேவரகொண்டாவிற்கு ஃபயர் எமோஜி அனுப்பிய ரஷ்மிகா மந்தனா!

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் படத்தில் ராஷ்மிகா ஹீரோயினாக நடித்துள்ளார். அந்தப் படத்தில் இடம் பெற்ற இங்கேம் இங்கேம் பாடல் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. அதில் இருந்து இருவருக்கும் ரசிகர் பட்டாளம் அதிகரித்துள்ளது.

இந்தப் படத்தின் பட்ஜெட் வெறும் ரூ. 5 கோடிதான் ஆனால் பாக்ஸ் ஆபிசில் ரூ. 65 கோடியை தாண்டிவிட்டதாம். அந்த அளவிற்கு இருவரின் ஜோடிப்பொறுத்தம் திரையில் மாஸாக இருக்கும். இருவரும் காதலிப்பதாக திரைத்துறையில் கிசுகிசுக்கப்பட்டும் வருகின்றனர்.

Liger First Look Crossbreed Vijay Deverakonda a kick

ஆனால் இருவரும் தங்கள் நண்பர்கள் தான் என கூறி தங்கள் சினிமா வாழ்க்கையில் கவனம் செலுத்து வருகின்றனர். அடுத்தடுத்து பல படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர். தற்போழுது ரஷ்மிகா விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.

தற்போழுது விஜய் தேவரகொண்டா லிகர் படத்தில் பிசியாக நடித்து வருகிறார்,இந்த படம் ஆகஸ்ட் 15 வெளியாக உள்ளது.பூரி ஜெகநாத் இயக்கும் இப்படத்தின் ட்ரைலர் சில தினங்களின் முன் வெளியாகியுள்ளது.

விஜய் தேவர்கொண்ட குத்துசண்டை வீரராக நடித்துள்ள இந்த படம் அதிரடி திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழியில் ஒரு பான் இந்திய திரைப்படமாக உருவாகிறது.

whatsapp image 2021 06 13 at 12 28 39 pm

படத்தில் அனன்யா பாண்டே மற்றும் முன்னாள் தொழில்முறை குத்துச்சண்டை உலக சாம்பியன் மைக் டைசன் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தினை தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தயாரிக்கிறார்.

இந்த நிலையில் தற்போழுது இந்த படத்தில் இருந்து ஒரு பாடல் வெளியாகியுள்ளது, இந்த பாடல் படத்தில் அம்மா ரம்யா கிருஷ்ணன் மற்றும் விஜய் தேவரகொண்டா நம்பிக்கை குறித்து துணிச்சலான தரும் வகையில் அமைந்துள்ளது.

1 1659103634358

விஜய் தேவரகொண்டா நடிக்கும் லைகர் படத்தின் மாஸான பாடல் இதோ !

நடிகர் ராஷ்மிகா மந்தனா, விஜய் தேவரகொண்டாவின் லிகரில் இருந்து வாட் லகா டெங்கே பாடலுக்கு பதிலளித்துள்ளார். விஜய் தனது புதிய பாடலின் இணைப்பை ட்விட்டரில் ட்வீட் செய்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, ராஷ்மிகா அதை ஃபயர் எமோஜி மூலம் பாராட்டினார்.

ரஷ்மிகா மந்தனாவின் கமெண்டிற்கு பதிலளித்த விஜய், பின்னர் சிரித்த முகத்துடன் சிவப்பு இதய ஈமோஜியை கைவிட்டார்.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top