உச்சகட்ட கிளாமரில் ராஷ்மிகா மந்தனா: ‘புஷ்பா’ படத்தின் புதிய போஸ்டர்!

பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா நடத்திவரும் தமிழ், தெலுங்கு திரைப்படமான ‘புஷ்பா’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ள நிலையில் அந்த போஸ்டரில் ராஷ்மிகா மந்தனா கிளாமரின் உச்சகட்டத்தில் போஸ் கொடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து வரும் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய திரைப்படம் ‘புஷ்பா’. இந்த படத்தின் பட்ஜெட் ரூ 250 கோடி என்பதும் இந்த படம் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் வில்லனாக வரும் பிரகாஷ்ராஜ் மற்றும் பகத்பாசில் நடித்து வருகின்றனர் என்பதும் இந்த படத்தில் மேலும் ஜெகபதி பாபு, ஹரிஷ் உத்தமன், கிஷோர் உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பதும், தேவிஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கேரக்டர், ஸ்ரீ வள்ளி என அறிவித்த படக்குழுவினர் அதுகுறித்த போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் கிளாமரின் உச்சகட்டமாக ராஷ்மிகா இருப்பதை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews