திருமணம் பற்றி மனம் திறந்த ராஷ்மிகா மந்தனா… யார் மாப்பிள்ளை தெரியுமா?
தெலுங்கு, கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா: தி ரைஸ் படத்தில் ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் நடித்த பிறகு, ராஷ்மிகாவின் ரசிகர்கள் வட்டாரம் இந்திய அளவில் அதிகரித்துள்ளது.
ராஷ்மிகா மந்தனாவும், தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டாவும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் கிளம்பிய நிலையில் இருவரும் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். இந்நிலையில் தனக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை வேண்டும் என்பது பற்றி ராஷ்மிகா மந்தனா மனம் திறந்துள்ளார்.
காதல் என்பது ஒருவருக்கொருவர் மரியாதை, நேரம் மற்றும் நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்ற உணர்வு யார் மீது வருகிறதோ? அதுவே ஆகும்.
திருமணத்தை பற்றி சொல்ல வேண்டும் என்றால், அதற்கான வயது எனக்கு இன்னும் வரவில்லை என நினைக்கிறேன். யார் ஒருவர் வசதியாக, பாதுகாப்பாக உணரவைக்கிறாரோ? அப்படிப்பட்ட நபரைத்தான் திருமணம் செய்வேன் எனத் தெரிவித்துள்ளார்.
