அனிமல் படம் பார்த்த வேலையா?.. முகத்தை காட்ட முடியாமல் தவிக்கும் ராஷ்மிகா மந்தனா.. என்ன ஆச்சு?..

கடைசியாக ராஷ்மிகா மந்தனா சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் படத்தில் நடித்திருந்தார். அந்த படத்திற்கு மோசமான விமர்சனங்கள் வந்திருந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் 900 கோடி வரை வசூலை அள்ளியது. இந்நிலையில், தனது புதிய தோற்றம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ராஷ்மிகா மந்தனா.

Snapinsta.app 429575308 338409149196069 9215273220901325051 n 1080

முகத்தை மறைத்த ராஷ்மிகா:

பெங்களுரை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா கன்னடத்தில் கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதை தொடர்ந்து தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா நடித்த கீதா கோவிந்தம் ஃப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த படத்தின் மூலம் ராஷ்மிகாவிர்க்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. மேலும் தமிழில் கார்த்தி நடித்த சுல்தான் படம் மூலம் அறிமுகமானார். அதையடுத்து விஜய்யின் வாரிசு படத்திலும் ஜோடியாக நடித்திருந்தார். ஆனால் எதிர்ப்பார்த்த அளவிற்கு தமிழில் பெரும் வரவேற்பை பெறவில்லை. ராஷ்மிகா பாலிவுட்டிலும் அமிதாப் பச்சனின் குட் பை படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து மிஷன் மஜ்னு, அனிமல் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இப்படி அனைத்து மொழிகளிலும் நடித்து வரும் ராஷ்மிகாவை நேஷ்னல் க்ரஷ் மற்றும் எக்ஸ்பிரஷன் குயின் என அழைக்கின்றனர்.

கடந்த ஆண்டு தென்னிந்திய நடிகைகளான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் ராஷ்மிகா மந்தனா பாலிவுட்டில் நடிக்கத் தொடங்கினர். இந்நிலையில் நயன்தாரா நடித்த முதல் படமான ஜவான் படத்திற்கு தாதாசாகேப் பால்கே விருதை சிறந்த நடிகைக்காக வென்றார். மேலும் ஃபிலிம் ஃபேர் விருதுக்கு ராஷ்மிகா நாமினேட் கூட செய்யபடாததால் வெளியே முகம் காட்ட முடியாத நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளார் என தெரிவித்திருந்தனர்.

Snapinsta.app 429711023 3678928785710254 4997921376343014627 n 1080

தனுஷ் படத்திற்காக லுக் சேஞ்ச்:

தற்போது ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராமில் தனது முகத்தை மூடியபடி செல்ஃபி எடுப்பது போல் போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். அவர் அடுத்த படத்திற்கான புது லூக்கில் தயாராகி வருவதால் தன் முகத்தை வெளியே காட்ட முடியாது என்று கூறியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்க்கும் போது அவரது கண் பகுதியில் தான் எதாவது மாற்றத்தை செய்திருப்பார் எனத் தெரிகிறது.

ராஷ்மிகா சென்ற ஆண்டு நடித்திருந்த வாரிசு, மஜ்னு, அனிமல் உள்ளிட்ட படங்கள் மூலம் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்த ஆண்டு தெலுங்கில் அல்லுஅர்ஜுனுடன் புஷ்பா 2 , ரெயின்போ, தி கேர்ள் ஃபிரண்ட், இந்தியில் சாவா ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.

இது ஒருபக்கம் இருந்தாலும் அடுத்து சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் தெலுங்கு படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த படத்திற்காகத்தான் தற்போது லுக்கை மாற்றியுள்ளார் எனக் கூறுகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...