விஜய்க்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா!! எந்த படத்தில் தெரியுமா?
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடித்த தமிழில் வெளிவந்த கீதா கோவிந்தம் படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்தார்.
இந்த படத்திற்கு பிறகு விஜய் தேவர் கொண்டாவை காதலிப்பதாகவும் விரைவில் இருவரும் திருமணம் நடைபெற இருப்பதாகவும் சோசியல் மீடியாவில் காட்டுதீயாய் பரவியது. ஆனால் இதற்கு இருவருமே மறுப்பு தெரிவித்து விட்டனர்.
இந்த நிலையில் சமீபத்தில் இவர்நடித்த புஷ்பா திரைப்பாடமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியாகி வசூலை வாரி குவித்தது.
இதனையடுத்து பீஸ்ட் படத்தை தொடர்ந்து தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கபோவதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது ராஷ்மிகா மந்தனா நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், இந்த தகவலை விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
