தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கு சினிமாவில் உருவான கீதா கோவிந்தம் படத்தின் மூலம் என்ட்ரி ஆகி ரசிகர்கள் மனதில் கொள்ளை அடித்தார்.
அதை கார்த்திக் நடிப்பில் வெளிவந்த சுல்தான் படத்தின் படத்தில் இவருக்கு பெரும் ஆதரவு கிடைத்தது. அதோடு அண்மையில் வெளிவந்த புஷ்பா படம் வசூலை வாரிக் குவித்தது மட்டுமல்லாமல் படவாய்ப்புகளும் குவிய தொடங்கியது.புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்க பகத் பாசில் தெலுங்கில் அறிமுகமாகி வில்லனாக நடித்திருப்பார், ராஷ்மிகா மந்தண்ணா ஹீரோயினாக நடித்திருப்பார் .
நடிகை ராஷ்மிகா கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் தரமாக நடித்துள்ளார்.ஐயா சாமி பாடலுக்கு அவர் ஆடிய ஆட்டம் உலக அளவில் பேசப்பட்டது, அனைத்து தரப்பு ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டார்.
குறிப்பாக தமிழ் தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளின் படங்களில் ராஷ்மிகா மந்தனா நடித்துவருகிறார். இதனிடையே தற்போது தளபதி விஜயின் 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்து வருகிறார்.ராஷ்மிகா மந்தனா, ரன்பீர் கபூர் மற்றும் சந்தீப் வாங்காவின் ‘அனிமல்’ போன்ற பெரிய பாலிவுட் திரைப்படங்களை தனது கையில் வைத்துள்ளார்.
அடுத்ததாக புஷ்பா 2 படத்திலும் நடிக்க உள்ளார், “புஷ்பா” வெளியான பிறகு, அவர் தனது இன்ஸ்டாகிராமில் 6 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைப் பெற்றார், இது அவரது பிரபலத்தை நிரூபிக்கிறது.பாலிவுட் தயாரிப்பாளர்கள் மற்றும் பிராண்டுகள் அவரை துரத்துகின்றன. கிராக்கி மற்றும் டிமாண்டைப் பார்த்து ராஷ்மிகா மந்தனா இப்போது பெரும் பணம் கேட்கிறார்.
கார்த்தியின் படத்தை பல கோடிக்கு வாங்கிய நெட்பிளிக்ஸ் நிறுவனம்! நடிக்காத படத்துக்கு இத்தனை விலையா?
‘புஷ்பா’ படம் வெளியாவதற்கு முன்பே ரூ.2 கோடி சம்பளம் வாங்கிய ராஸ்மிகா. இப்போது, இந்தி படங்களுக்கு 4 கோடி ப்ளஸ், தெலுங்கு படங்களுக்கு 3 கோடி ப்ளஸ் கேட்கிறாராம். புஷ்பா’ படத்தின் இரண்டாம் பாகத்திற்காக 4 கோடி ரூபாய் கொழுத்த சம்பளத்தை வாங்குகிறார்.ராஷ்மிகா மந்தனாவின் ரசிகர்கள் பட்டாளம் அதிகரிக்க அதிகரிக்க அவரின் சம்பளமும் அதிகரிக்கிறது.