விஜய்யை தொடர்ந்து மீண்டும் கார்த்தியுடன் இணையும் ராஷ்மிகா மந்தனா! எந்த படத்தில் தெரியுமா?

நடிகை ராஷ்மிகா தென்னிந்திய சினிமாவை தொடர்ந்து பாலிவுட்டிலும் கால்பதித்து மிக பிஸியான நடிகையாக வலம் வருகிறார். தமிழில் கார்த்தி நடித்த சுல்தான் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். தற்போது விஜய் நடித்து வரும் வாரிசு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

ராஷ்மிகா தற்போழுது விஜய்யுடன் வாரிசு,ஹிந்தியில் குட்பை, மிஷன் மஜ்னு, அனிமல் என மூன்று படங்களில் நடித்து வருகிறார். அல்லு அர்ஜுனுடன் நடிக்க இருக்கும் புஷ்பா- 2 படத்தில் அல்லு அர்ஜுனின் மனைவி ஸ்ரீவள்ளியாக நடிக்கிறேன் என தெரிவித்துள்ளார் ராஷ்மிகா மந்தனா.

kaarththi 1 1

அந்த படத்திற்கு தனது சம்பளத்தை 4கோடியில் இருந்து 5 கோடியாக உயர்த்தியுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அடுத்தபடியாக 3வது முறையாக தமிழில் இயக்குனர் மித்ரன் இயக்கும் ஜப்பான் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கமிட்டாகி இருக்கிறார்.

ட்ரீம் வாரியம் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க இருக்கும் தகவல் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

தனுஷின் ‘மேகம் கருக்காதா’ மேக்கிங் வீடியோ ! மகிழ்ச்சியில் டான்ஸ் மாஸ்டர் ஜானி..

karthi sultan

 

புஷ்பா படத்தில் வில்லனாக நடித்த சுனில் இந்த படத்தில் வில்லனாக நடிக்கயுள்ளார், ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்நிலையில் ஜப்பான் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் தூத்துக்குடியில் தொடங்க இருக்கிறது.படம் 2023 டிசம்பர் மாதம் வெளியாகும் தவறினால் 2024 பொங்கலுக்கு வெளியாக தயாரியாகிவிடும் என கூறப்படுகிறது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment