Connect with us

புஷ்பா 2வில் ராஷ்மிகா இல்லையா? அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட தயாரிப்பாளர்!

puspha

பொழுதுபோக்கு

புஷ்பா 2வில் ராஷ்மிகா இல்லையா? அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட தயாரிப்பாளர்!

இயக்குநர் சுகுமார் எழுதி இயக்கி, தெலுங்கு மொழியில் வெளியான அதிரடி பரபரப்புத் திரைப்படம் தான் புஷ்பா.இந்தப் படத்தில், அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்க பகத் பாசில் தெலுங்கில் அறிமுகமாகி வில்லனாக நடித்திருப்பார், ராஷ்மிகா மந்தண்ணா ஹீரோயினாக நடித்திருப்பார் .நடிகை ராஷ்மிகா கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் தரமாக நடித்துள்ளார். கவர்ச்சிக்கு கொஞ்சம் கூட குறைவில்லாமல்  நடித்துள்ளார்.

ras pus

திரைப்படத்தின் இரண்டு பாகங்களில் முதல் பாகம், ஆந்திரப் பிரதேசத்தின் சேசாசலம் மலைப்பகுதியில் செஞ்சந்தன மரக்கடத்தலை அடிப்படையாகக் கொண்டு கதைக்களம் அமைந்துள்ளது.

இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் 17 டிசம்பர் 2021 தெலுங்கிலும், மலையாளம், தமிழ், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

மைத்திரி மூவி மேக்கர்சும் முட்டம் செட்டி மீடியா நிறுவனமும் இதை தயாரித்த இப்படம் 250 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.

புஷ்பா முதல் நாளில் ரூ.45 கோடி வசூலித்தது. படம் வெளியாகி அந்த வகையில் 50 நாட்களில் உலகளவில் 365 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனையை புஷ்பா படம் படைத்தது.

இந்த படத்தில் அனைத்து பாடல்களுக்கும் வேற லெவலுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக சமந்தா ஆடிய பாடலான ‘ஓ சொல்றியா மாமா’ பாடல் சில நெகட்டிவான விமர்சனங்களை பெற்றாலும், ரசிக்க வைத்து உலக அளவில் ரசிகர்களை பெற்றது.

இந்நிலையில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் உருவாக தயாராகி வருகிறது. முதல்பாகத்தை விட இன்னும் பிரம்மாண்டமாய் அதிரடி ஆக் ஷன் உடன் கூடிய அசத்தலான கதையில் இந்த படம் தயாராக உள்ளது.

NTLRG 20211006203352527291

இரண்டாம் பாகத்தில் அல்லு அர்ஜுன், பகத் பாசில் இருவருக்கிடையிலான மோதல் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.அல்லு அர்ஜுன், பகத் பாசில் இடையே மோதல் நடந்து கொண்டிருக்கும் போது, இவர்களின் மோதலில் ராஷ்மிகா இறந்துவிடுவார் என்று கிசுகிசுக்கப்படுகிறது. இவ்வாறு ராஷ்மிகா மந்தனாவின் கதாபாத்திரம் கொல்லப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது.

இந்த வதந்திகளை மறுத்து இந்தபட தயாரிப்பாளர் ரவி ஷங்கர், ‛‛இன்னும் கதையே முழுதாக ரெடியாகவில்லை. அதற்குள் கதை குறித்து வதந்திகள் மட்டும் பரப்பி விடுகின்றனர்.

தனுஷின் திருச்சிற்றம்பலம் – ஃபஸ்ட் சிங்கள் புரோமோ !

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top