தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கு சினிமாவில் உருவான கீதா கோவிந்தம் படத்தின் மூலம் என்ட்ரி ஆகி ரசிகர்கள் மனதில் கொள்ளை அடித்தார்.
பின்னர் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த சுல்தான் படத்தின் படத்தில் இவருக்கு பெரும் ஆதரவு கிடைத்தது. அதோடு அண்மையில் வெளிவந்த புஷ்பா படம் வசூலை வாரிக் குவித்தது மட்டுமல்லாமல் படவாய்ப்புகளும் குவிய தொடங்கியது.
குறிப்பாக தமிழ் தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளின் படங்களில் ராஷ்மிகா மந்தனா நடித்துவருகிறார். இதனிடையே தற்போது தளபதி விஜயின் 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்து வருகிறார்.
சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டவர். அந்த வகையில் தற்போது சிகப்பு நிற புடவையில் சிலுக்கவைக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.