
Entertainment
விஜய் 66ல் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா! தேவையா இது எல்லாம்..
நடிகர் விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி இயக்கத்தில் ‘தளபதி 66’ என்ற படத்தில் விஜய் நடித்துவருகிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.இந்த தளபதி 66 படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
தளபதி 66 படத்தில் 6 பாடல்கள் இருப்பதாகவும், இது சென்டிமென்ட் படம் என்றும் இதில் சண்டை காட்சிகள் இல்லை என கூறப்படிகிறது.விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார்.ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் என்று பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், 2ம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் ஜூன் 3 தொடங்கியுள்ளது.இப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.அதைத்தொடர்ந்து இந்த படத்தில் இரண்டு ஹீரோயின்கள் உள்ளனர்.
ஒரு ஹீரோயினான ராஷ்மிகா மந்தனா சிறு வயதிலிருந்தே விஜய்யின் ரசிகையாம்,விஜய்யுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்ததாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அதேபோல தளபதி 66 படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது,தளபதி 66 பூஜையில் அவர் விஜய் உடன் நின்று கொடுத்த ரியாக்ஷன் பெரிய அளவில் வைரல் ஆனது.அந்த மேடையிலே விஜய்க்கு சுத்திப்போட என தன் மகிழ்ச்சியை அழகாக பதிவிட்டுள்ளார்.
அழகு பதுமையாக இருக்கும் ராஷ்மிகாவுக்கு இந்த படத்தில் என்ன ரோல் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. தலைக்கனம் பிடித்த பெண்ணாக தான் இதில் ராஷ்மிகா நடிக்கிறாராம்.அதிக சுயநலம் கொண்டவராகவும் மற்றும் தலைக்கனம் பிடித்த ஒரு பெண் ரோலில் நடிக்கிறேன் என அவரே சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அப்படி நடிப்பது இதுவே முதல்முறை என்றும் தனக்கு இப்படி நடிப்பது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என தெரிவித்து இருக்கிறார்.
3 ஆண்டுகள் கழித்து வெளியாகும் விஜய் சேதுபதியின் மாமனிதன்!
