Connect with us

புஷ்பா 2 படத்தின் ஷூட் அப்டேட்டை கொடுத்துள்ளார் ராஷ்மிகா !

saami saami fails to match hype around allu arjuns pushpa 001 1 1

பொழுதுபோக்கு

புஷ்பா 2 படத்தின் ஷூட் அப்டேட்டை கொடுத்துள்ளார் ராஷ்மிகா !

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடித்து வெளியான திரைப்படம் புஷ்பா. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்திருப்பார், கிராமத்து பெண்ணாக இவர் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.கடந்த ஆண்டு இறுதியில் வெளியான படம் புஷ்பா. இப்படமானது ரசிகர்கள் மத்தியில் நல்லவரவேற்பை பெற்றது வசூலிலும் பட்டிதொட்டியெல்லாம் பட்டைய கிளப்பியது.

புஷ்பா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் விரைவில் வருவதற்கு ரெடியாகியுள்ளது. படத்தின் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா தற்போழுது பல்வேறு மொழி படங்களில் பிஸியாகிவிட்டார். சமீபத்தில் சீதா ராமம் படத்தில் நடித்தார், அதில் அவர் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்தார்.

maxresdefault 17

மேலும் அதை தொடர்ந்து அமிதாப் பச்சனுடன் அவர் நடித்த குட் பை என்ற படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வில் பேசிய ராஷ்மிகா, புஷ்பா 2 படப்பிடிப்பு ஓரிரு நாட்களில் தொடங்கும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்களின் மனதை மகிழ்வித்துள்ளது.

அதை தொடர்ந்து அமிதாப் மற்றும் அல்லு அர்ஜுனுடன் பணிபுரிவதன் மூலம் தனது கனவை நிறைவேற்றுவதாகவும் கூறினார். நடிகை ராஷ்மிகா பிக் பியை ஒரு ஜாம்பவான் என்றும் அழகான மனிதர் என்றும் அழைத்தார்.

bollywood actress rashmika mandanna spotted at 1431571

கோப்ரா 2 க்கு ஆசையா ? இயக்குனர் கொடுத்த மாஸ் அப்டேட் !

குட் பை படத்தில் அமிதாப்பின் மகளாக நடிக்கிறார். இந்த படங்கள் தவிர, ரஷ்மிகா விஜய்யின் வாரிசு, ரன்பீர் கபூர் மற்றும் சந்தீப் ரெட்டி வாங்காவின் அனிமல் மற்றும் மிஷன் மஜ்னு படத்திலும் முன்னணி நடிகையாக உள்ளார்.

விஜய்யின் வாரிசு படத்தில் சுயநலம் கொண்ட பெண்ணாக அதிகம் குறும்புகள் கொண்ட பெண்ணாகவும் ஹீரோ விஜய்யிடம் வாயாடும் பெண்ணாக நடிக்க உள்ளதாகவும் சமீபத்தில் பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top