ராஷ்மிகாவுக்கு வந்த மவுசு..? பாகுபலி ஹீரோவை டச்பன்னிட்டாரே !!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிகர் கார்த்திக் நடிப்பில் உருவான சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

பின்னர் இவர் நடித்த அண்மையில் வெளியான புஷ்பா படத்தில் வெளிவந்த ஏ சாமி ஏ சாமி என்ற பாடல் பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது  மட்டுமல்லாமல் இவருடைய மார்க்கெட்டும் உயர தொடங்கியது.

குறிப்பாக இளையதளபதி நடித்துவரும் 66வது படத்தில் கமிட் ஆகிய ராஷ்மிகா தற்போது தெலுங்கு, ஹிந்தி சினிமாக்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இயக்குனர் சந்திப்பு ரெட்டி இயக்கத்தில் உருவாகும் ’ஸ்பிரிட்’ என்ற படத்தில் நடிகர் பிரபாஸ் ஹீரோவாகவும் ராஷ்மிகா ஹீரோயினியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சோசியல் மீடியாவில் தகவல்கள் கசிந்துள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment