பொளந்து கட்டிய ரஷித்கான் .. இலக்கை நெருங்கிய குஜராத்.. மும்பை அதிர்ச்சி..!

நேற்றைய ஐபிஎல் போட்டி குஜராத் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடந்த நிலையில் குஜராத் அணி 219 என்ற இலக்கை நோக்கி விளையாடிய நிலையில் ஐந்து விக்கெட்டுக்கு 55 ரன்கள் என்று தத்தளித்துக் கொண்டிருந்தது. ஆனால் குஜராத் அணியின் ரஷித்கான் அதிரடியாக விளையாடியதால் மும்பை அணி அதிர்ச்சி அடைந்தது. இருப்பினும் ரஷித்கான் குஜராத் அணிக்கு வெற்றியை வெற்றிலை தேடி தர முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததை அடுத்து மும்பை அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் சூரியகுமார் யாதவ் மிக அபாரமாக விளையாடி 103 ரன்கள் அடித்தார் என்பதும் அதில் 11 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்தது.

suryakumar yadav1இதனை அடுத்து 219 என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் அணிக்கு அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டது. ஹர்திக் பாண்டியா, சஹா, அபினவ், கில், விஜய் சங்கர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க எண்களில் ரன்கள் எடுத்து அவுட் ஆகியதால் மும்பை அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகியது. ஆனால் ரஷித் தான் பேட்டிங் செய்ய களம் இறங்கியவுடன் நிலைமை சற்று மாறியது. அவர் 32 பந்துகளில் 79 ரன்கள் அடித்து கடைசிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார் என்பதும் அவர் மொத்தம் 79 ரன்கள் எடுத்தார் என்பதும்அதில் 10 சிக்ஸர்கள் மற்றும் மூன்று பவுண்டரிகள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் எடுத்த 79 ரன்களில் 78 ரன்கள் பவுண்டரிகளும் சிக்சர்களும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தும் ரஷித் கானால் வெற்றிக்கு தேவையான 219 என்ற இலக்கை கொண்டு செல்ல முடியவில்லை 191 ரன்கள் மட்டுமே எடுத்து குஜராத் தோல்வி அடைந்தது இருப்பினும் மோசமான ரன் ரேட் இல்லாமல் பார்த்துக் கொண்டதில் ரஷித்கானுக்கு பெரும் பங்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய போட்டியின் முடிவில் குஜராத் அணி 16 புள்ளிகள் உடன் முதல் இடத்தில் உள்ளது. மும்பை அணி நேற்றைய போட்டியில் அபார வெற்றி பெற்றதை அடுத்து 14 புள்ளிகள் மூன்றாவது இடத்தில் உள்ளது. சென்னை அணி 15 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில் ஹைதராபாத் டெல்லி தவிர மீதமுள்ள எட்டு அணிகளில் எந்த அணி வேண்டுமானாலும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் இனி வரும் போட்டிகள் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...