ஏலத்திற்கு வருகிறது அரியவகை நீல வைரம்: எத்தனை கோடி தெரியுமா?
வைரங்கள் என்றாலே விலை உயர்ந்தவை தான். ஆனால் அரிய வகை வைரம் என்றால் சொன்னால் சொல்லவா வேண்டும். அந்த வகையில் ஹாங்காங்கில் உள்ள ஃபைன் ஆர்ட்ஸ் நிறுவனத்தில் சோதஃபி என்ற நிறுவனத்தில் வரும் ஏப்ரல் மாதத்தில் ஏலம் நடைபெருவதாக தெரிகிறது.
இதுவரையில் சாதாரண வைரங்கள் 10 கேரட்டிற்கு மட்டுமே ஏலம் விடப்பட்டுள்ளன. ஆனால் De Beers Cullinan Blue என அழைக்கப்படும் மிக அரியவகை வைரமான இது 15 கேரட்டிற்கு அதிகமாக இருப்பதால் போட்டிகளும் கொஞ்சம் அதிகம் தான்.
அந்த வகையில் , தென் ஆப்பிரிக்காவின் கல்லினன் சுரங்கத்தில் இருந்து கடந்த 2021-ம் ஆண்டு எடுக்கப்பட்ட வைரம் 350 கோடி ரூபாய் ஏலத்திற்கு போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
