16 -வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: 25 பேர் கைது!!

புதுச்சேரி மாநிலத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் 22 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுச்சேரியில் கடந்த சில நாட்களாகவே பாலியல் தொழில் குறித்த புகார்கள் தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் புதுச்சேரி அடுத்த மோகன் நகரில், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பாலாஜி – உமா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர்.

இவர்கள் 16 வயதுடைய சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுப்படுத்தியதாக தன்வந்திரி காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பாலாஜி – உமா-விடம் விசாரணை நடத்தினர்.

அப்போது 16 வயது சிறுமியை 25 பேர் பாலியல் வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இந்த சூழலில் தம்பதியினர் உட்பட 27 பேர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தற்போது பாலாஜி உள்ளிட்ட 22 பேரைக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள உமா உள்ளிட்ட 5 பேரைத் போலீசார் வகைவீசி தேடி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment