Connect with us

பி.இ மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!!

Ponmudi

தமிழகம்

பி.இ மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!!

பொறியியல் படிப்பில் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டுள்ளார்.

இதனிடையே தமிழகத்தில் இருக்கும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கு கலந்தாய்வு என்பது வருகின்ற 25-ம் தேதி முதல் அக்டோபர் 21-ம் தேதி வரையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த சூழலில் பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான விண்ணப்பப்பதிவானது கடந்த மாதம் ஜூன் 20-ம் தேதி தொடங்கியது. இதற்கு சுமார் 2 லட்சத்து 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்த 1.69 லட்சம் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. அதோடு http://tneaonline.org என்ற இணையதளத்தில் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

மேலும், நடப்பாண்டில் 18 பொறியியல் கல்லூரிகளில் போதிய உள்கட்டமைப்பு போன்ற வசதிகள் இல்லாத காரணத்தினால் குறிப்பிட்ட கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறாது என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top