Connect with us

இலங்கையின் புதிய பிரதமராக ரணில் தேர்வு..!! நாளை 15 பேர் கொண்ட புதிய அமைச்சரவை..!!

ranil wickremesinghele

News

இலங்கையின் புதிய பிரதமராக ரணில் தேர்வு..!! நாளை 15 பேர் கொண்ட புதிய அமைச்சரவை..!!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் ராஜினாமாவை அடுத்து இலங்கையில் பெரும் கலவரம் வெடித்தது. மேலும் அவர் அடுத்த நாளே இலங்கை விட்டு நாடு உள்ளதாக தகவல்கள் பரவியது. ஒருசில வீடியோவும் வெளியானதால் இலங்கையில் மேலும் பரபரப்பை நீடித்தது.

இந்த நிலையில் இலங்கையில் புதிதாக யார் பிரதமராக பொறுப்பேற்பார் என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் அதிகமாக காணப்பட்டது. ஏனென்றால் தற்போது இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ளது.

இதனை மீட்பதற்கு ஒரு சிறந்த பிரதமர் தேவை என்ற சூழ்நிலையில் இலங்கையில் காணப்படுகிறது. இந்த நிலையில் இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே பிரதமராக அதிகாரபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார் ரணில் விக்கிரமசிங்க. பொருளாதார நெருக்கடியால் மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்த நிலையில் புதிய பிரதமராக ரணில் தேர்வானார். 15 பேரைக் கொண்ட புதிய அமைச்சரவை நாளை பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in News

To Top