ரன்பீர்- ஆலியா பட் ஜோடிக்கு இன்று கோலாகல திருமணம்..! இணையத்தில் கசிந்தது..
பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர ஜோடியாக இருந்து வருபவர்கள் ரன்பீர் கபூர் – ஆலியா. இவர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வந்தனர்.
இதற்கிடையில் உங்களுக்கு எப்போது திருமணம் நடைபெறும் என ரசிகர்கள் கேள்வியெழுப்பி வந்தனர். இதனிடையே திருமணத்தேதி தொடர்பாக மாறுபட்ட கருத்துகளை இருவரும் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் இம்மாதம் 17-ம் தேதி திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல்கள் கசிந்தது. இதனால் மீண்டும் திருமண தேதியை மாற்றி அமைத்துள்ளதாக செய்தி வெளியாகி இருக்கிறது
இதனிடையே நலங்கு, மெகந்தி போன்ற முக்கிய விழாக்களை நேற்றே ரகசியமாக சிம்பிளான முறையில் நடந்து முடிந்தாக தெரிகிறது. தற்போது செம்பியூரில் உள்ள ஆர்.கே. இல்லத்தில் ரன்பீர் கபூர் – ஆலியா பட் எளிமையான முறையில் திருமணம் செய்துள்ளதாக சோசியல் மீடியாவில் தகவல்கள் பரவிவருகிறது.
மேலும் இவர்களது திருமணத்திற்கு ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்திருந்த இயக்குநர் ராஜமெளலி, ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் மற்றும் கரீனா கபூர் ஆகியோர் சென்றது குறிப்பிடத்தக்கது.
