ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக பிரபலமாக துவங்கியவர் நடிகை ரம்யா பாண்டியன்.
இதன்பின் பெரிதும் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால், போட்டோ ஷூட் பக்கம் தனது கவனத்தை திருப்பி, பிரபலமானார் நடிகை ரம்யா பாண்டியன்.
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 4 மூலம் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் தன்னை பிரபலப்படுத்தி வரும் ரம்யா பாண்டியன், பிக் பாஸ் சீசன் 4ல் பைனல் வரை சென்றுள்ளார்.
சமீபத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் நடைபெற்ற Freeze டாஸ்கில் ரம்யா பாண்டியனின் அம்மா மற்றும் தம்பி வருகை தந்திருந்தனர். இந்நிலையில் ரம்யா பாண்டியனுக்கு தங்கை ஒருவர் இருக்கிறாராம். அவரின் பெயர் திரிபுரசுந்தரி. தற்போது ரம்யா பாண்டியன் அவரது தங்கையுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி பரவலாக பேசப்பட்டு வருகிறது.