சூர்யா நிறுவனத்தில் ரம்யா பாண்டியன்… செம லக் தான் போங்க!

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. ஆரி, பாலா, ரம்யா, சோம், ரியோ ஆகிய 5 இறுதிப்போட்டியாளர்களுள் ஆரி  பிக்பாஸ் டைட்டில் வென்றெடுத்தார். 
இந்நிலையில் 106 நாட்களை கடந்து பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடுமையான போட்டியாளராக திகழ்ந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். 

பொதுவாக அமைதியா இருந்தாலும், பேச வேண்டிய இடத்தில் தனது கருத்தை நறுக்கென சொல்லி விடுகிறார். பாலாஜி கூறும்போது கூட “ஆண்களுக்கு பெண்கள் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை என்பதற்கு ரம்யா ஒரு சிறந்த உதாரணம் என்று கூறியிருந்தார். அப்படி தனது சாதுர்ய குணத்தினால் பல சூழ்நிலைகளை சுமூகமாக மாற்றுவது அவருக்கே உரிய தனித்திறமை.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரம்யா பாண்டியன் தனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் இந்த படத்தை தயாரிக்கின்றனர். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் ரம்யா பாண்டியன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த படத்தை புதுமுக இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்க இருக்கிறார். இந்நிலையில் விரைவில் படப்பிடிப்புகள் துவங்கும் என்று தெரிகிறது. இந்த செய்தி ரம்யா பாண்டியன் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.