ரம்யா கிருஷ்ணனின் ‘பிக்பாஸ்’ எப்படி இருந்தது: ஒரு பார்வை

பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 ஆண்டுகளாக தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசன் அவர்களுக்கு திடீரென கொரனோ பாதிப்பு ஏற்பட்டதால் நேற்றைய நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.

நேற்றைய முதல் நாளில் அனுபவம் வாய்ந்த தொகுப்பாளர் போல் மிகச் சிறப்பாக ரம்யாகிருஷ்ணன் நிகழ்ச்சியை நடத்தியதாகவும் குறிப்பாக ஒவ்வொரு போட்டியாளர்களையும் அவர் தனித்தனியாக தனது கருத்தை தெரிவித்து தைரியமாக தெரிவித்தது அனைவரும் பாராட்டும் வகையில் இருந்ததாகவும் கூறப்பட்டது.

அதேபோல் சிபி மற்றும் அக்ஷரா ஆகிய இருவருக்கு இடையிலான பிரச்சனையை மிகவும் லாவகமாக கையாண்டார் என்பதும் சிபிக்கு ஒரு குறும்படத்தை போட்டு காட்டி அவரது தவறை சுட்டிக் காட்டியது அவரது முதிர்ச்சியை காட்டுவதாகவும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

மொத்தத்தில் நேற்றைய முதல் நாள் நிகழ்ச்சியில் கமல்ஹாசனுக்கு இணையாக அவர் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தி விட்டார் என்றும் இனிமேல் அவரே தொடர்ந்து நடத்தினால் கூட நிகழ்ச்சி விறுவிறுப்பாக செல்லும் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment