ராம்குமார் சிறை மரணத்தில் சந்தேகம்! கரண்ட் அடிச்சு ராம்குமார் சாகவில்லை!!

சில வருடங்களுக்கு முன்பு நம் தமிழகத்தில் இந்த கொடூர கொலை நடைபெற்றது. அதுவும் பகல் நேரத்தில் ரயில்வே நிலையத்தில் கொலை நடைபெற்றது. அதன்படி இளம்பெண் சுவாதி ரயில்வே நிலையத்தில் பகல் பொழுதில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.சுவாதி  ராம்குமார்

இவரின் கொலை சம்பந்தமாக ராம்குமார் என்பவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் ராம்குமாரும் மரணமடைந்தார்.சிறையில் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்றும் கொலை செய்யப்பட்டார் என்றும் கூறப்பட்டது அதனால் தற்போது ராம்குமார் மரணத்தில் சந்தேகம் என்று கூறப்படுகிறது.

அதன்படி ராம்குமார் மரணத்தில் சந்தேகம் தொடர்பாக பிரேத பரிசோதனை செய்ய மருத்துவரிடம் விசாரணை நிகழ்த்தப்படுகிறது. சென்னை அடையாற்றில் மனித உரிமைகள் ஆணையத்தில் ஆஜரான மருத்துவ செல்வகுமாரிடம் விசாரணை நிகழ்த்தப்படுகிறது.

சிறையில் மின்சாரம் தாக்கி ராம்குமார் இறக்கவில்லை என மருத்துவர்கள் கூறியதாக வழக்கறிஞர் ராம்ராஜ் தகவல் அளித்தார். நுங்கம்பாக்கம் ரயில்வே நிலையத்தில் சுவாதியை கொன்றதாக கைதான ராம்குமார் 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சிறையில் வைத்து மரணமடைந்தார்.

இதனால் அவரது மரணம் மர்மமாகவே காணப்பட்டுள்ளது. இதுகுறித்து தற்போது மருத்துவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment