இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானம்! ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!!
தமிழகத்தில் தினந்தோறும் பாதிக்கப்படும் தொழிலாக மாறியுள்ளது மீன்பிடி தொழில். ஏனென்றால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றால் அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்தார்கள் என்று கூறி இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது கடும் தாக்குதலை ஏற்படுத்துவர்.
ஒரு சில நேரங்களில் மீனவர்களை கைது செய்து அழைத்துச் செல்வர். இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு இலங்கை அரசால் ஒரு அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது. அதன்படி 105 தமிழக படகுகளை ஏலம் விட இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக கூறியிருந்தது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளன.ர் தமிழக மீனவர்கள் படகுகளை இலங்கை கடற்படை ஏலம் விடுவதை தடுக்காவிட்டால் பிப்ரவரி 2-ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்யப்படும் என்றும் கூறியுள்ளனர்.
இந்திய அரசால் வழங்கப்படும் ஆவணங்களை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க போவதாகவும் மீனவர்கள் எச்சரித்துள்ளனர். தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 105 படகுகளை இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இலங்கை அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த ஒன்றியத்துக்கு ராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இலங்கை அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்தக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் அவசர ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க ராமேஸ்வரம் மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
