Connect with us

அக்டோபர் 1ஆம் தேதி வரை “ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்!!”

News

அக்டோபர் 1ஆம் தேதி வரை “ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்!!”

008edaaa72ce4c4ebd6d18bc39e9fb84-1

தற்போது தமிழகத்தில் மழை பெய்கிறது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் காற்று அதிவேகத்துடன் வீசப்படுகிறது. மேலும் தமிழகத்தில் இதமான வானிலையும் காணப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கினால் ஒரு சிலரின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும். அதன் வரிசையில் தற்போது முதலிடத்தில் காணப்பட்டுள்ளனர் மீனவர்கள். ஏனென்றால் மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத அளவிற்கு கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படும்.5f41c9fcc8291f0bacc739dfdd3a414b-1 மேலும் காற்று சூறாவளி போல வீசும். இந்த நிலையில் தற்போது இந்த மீனவர்கள் திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவர்கள் வருகின்ற ஒன்றாம் தேதி வரை வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் அக்டோபர் 1ஆம் தேதி வரை வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மேலும் ராமேஸ்வரம் துறைமுகத்தில் விசைப்படகுகளை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என மீனவர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. மேலும் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திற்கு புதிதாக வந்துள்ள மூன்று விசைப்படகுகளை  அகற்றவும் மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் அவர்கள் அக்டோபர்  ஒன்றாம் தேதி வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top