ராமேஸ்வரம் கோவிலில் உள்ள உப்பு லிங்கம்

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவில் உலக புகழ்பெற்றது. இந்திய அளவில் காசிக்கு அடுத்து ராமேஸ்வரம்தான் என்ற அடிப்படையில் இந்தியா முழுவதும் இந்த கோவிலுக்கு நாள்தோறும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இங்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக ராமர் தன் கையால் செய்த மணல் லிங்கமான ராமலிங்க ஸ்வாமிதான் இங்கு மூலவராக அருள்பாலிக்கிறார்.

இந்த லிங்கம் போக சுற்றிவரும் பிரகாரத்தில் பல லிங்கங்கள் இருக்கின்றன. இதில் அதிகம் வெளியில் தெரியாத லிங்கம் உப்பு லிங்கம்.

உப்பு லிங்கத்துக்கு இன்று வரை பூஜைகள் செய்யப்பட்டாலும் இது பெரும்பாலான பக்தர்களுக்கு தெரிவதில்லை.

பாஸ்கரராயர் என்ற அம்பாள் பக்தர் இந்த உப்புலிங்கத்தை உருவாக்கியுள்ளார்.
கோயிலில் உள்ள மணல் லிங்கம், மணலால் செய்யப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை மணலால் செய்யப்பட்டிருந்தால் அபிஷேகம் செய்யும் போது அது கரைந்து போயிருக்கும் என்ற வாதம் ஒரு முறை ஏற்பட்டது.

அப்போது அங்கு வந்திருந்த  பாஸ்கரராயர் என்பவர், இல்லை இது  மணலால் தான் செய்யப்பட்டது என வாதம் செய்து பார்த்தார்

மற்றவர்கள் நம்ப மறுத்ததால், நான் இப்போது ஒரு உப்பு லிங்கம் செய்து அதற்கு அபிஷேகம் செய்து காண்பிக்கிறேன் என்று உப்பு லிங்கம் செய்தார்.அவர் சொல்லியது போலவே உப்பில் செய்த லிங்க செய்தார் அந்த லிங்கம் கரையவில்லை இந்த லிங்கம் வஜ்ராயுத லிங்கம் என அழைக்கப்படுகிறது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print