Entertainment
நடிகர் ரமேஷ்கண்ணாவுக்கு ஓட்டு இல்லாததால் ஆதங்கம்
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானவர் ரமேஷ்கண்ணா. அதற்கு முன்னே அபிராமி , ஆண்பாவம் உள்ளிட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருப்பார். இருப்பினும் இவருக்கு உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படமே கை கொடுத்தது.

அந்த நேரத்தில் அஜீத்தை வைத்து இயக்கிய தொடரும் படமும் வெளிவந்து இவருக்கு இயக்குனர் அந்தஸ்தை கொடுத்தது.
ரமேஷ்கண்ணா இன்று ஓட்டளிக்க வாக்குச்சாவடிக்கு சென்ற போது அவரது பெயர் வாக்குச்சாவடியில் இல்லை அதனால் அவர் வாக்களிக்க மறுக்கப்பட்டது.
இதனால் கோபம் அடைந்த ரமேஷ்கண்ணா இன்று காலை நாகர்கோவில் செல்ல வேண்டி இருந்ததால் முதல் ஆளாக வாக்களிக்க சீக்கிரமே சென்று விட்டேன் என் பெயர் இல்லாமல் போய்விட்டது.
ஒரு வேளை சினிமாக்காரர்கள் சினிமாக்காரருக்குத்தான் ஓட்டு போடுவாங்கன்னு நினைச்சிட்டாங்களோ என்னவோ என கோபத்தில் கூறியுள்ளார்.
