ரூ. 500 கோடி பட்ஜெட்டில் ராமாயணம்: அல்லு அர்ஜுன் திட்டவட்டம்!!

புராண கதைகளில் ஒன்றாக கருதப்படும் ‘ராமாயணம்’நாவலை தழுவி விரைவில் திரைப்படமாக வரவுள்ளது. இந்நிலையில் படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருவதாக நடிகர் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே நடிகர் பிரபாஸ் நடிப்பில் ஆதிபுரூஷ் என்ற திரைப்படம் உருவாகவுள்ளது. அதே போல் பிரபாஸ்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சனோன் கம்மிட்டாகியுள்ள இப்படம் வருகின்ற 2023-ம் ஆண்டு திரைக்கு வரவுள்ளது.

இந்த சூழலில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ‘ராமாயணம்’படம் விரைவில் திரைக்கு வர இருப்பதாகவும், 6 மாதத்திற்குள் pre-production பணிகள் முற்றிலும் நிறைவுபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதற்காக சுமார் ரூ. 500 கோடி பட்ஜெட் போடப்பட்டு இருப்பதாகவும், பட்ஜெட் மதிப்பானது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.