Connect with us

வட மாநிலங்களை சுற்றிப்பார்க்க ராமாயண காவிய சிறப்பு ரயில்: கட்டணம் இவ்வளவு தானா?

News

வட மாநிலங்களை சுற்றிப்பார்க்க ராமாயண காவிய சிறப்பு ரயில்: கட்டணம் இவ்வளவு தானா?

7ba035b34a9d10404330980dec242546

தென்மாநிலங்களில் உள்ளவர்கள் வடமாநிலங்களில் சுற்றி பார்ப்பதற்காக ராமாயண காவிய சிறப்பு ரயில் ஒன்று நவம்பர் 16ஆம் தேதி இயக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது

தென் மாநிலங்களை சேர்ந்தவர்கள் வட இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்வதற்காக ராமாயண காவிய சிறப்பு ரயில் ஒன்று தற்போது ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த ரயில் மதுரையிலிருந்து நவம்பர் மாதம் 16ம் தேதி தொடங்குகிறது

இந்த ரயில் திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், விழுப்புரம், சென்னை ஆகிய ஊர்களில் உள்ளவர்களை ஏற்றி கொண்டு, வடமாநிலத்திலுள்ள ஹம்பி, நாசிக், சித்திரக்கூடம், காசி, கயா, சீதாமார்ஹி, நேபாள் ஜனக்புரியில் சீதா ஜென்ம பூமி, அயோத்தியில் இராம ஜென்ம பூமி, நந்திகிராம், சிருங்க வெற்பூர், பிரயாக்ராஜ் போன்ற சரித்திர புகழ் பெற்ற இடங்களில் உள்ள இராமாயண காவியத்துடன் தொடர்புடைய இடங்களை மன நிறைவுடன்  தரிசிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், வடமாநிலத்திற்கு செல்லும் போது, அங்குள்ள புகழ்பெற்ற இடங்களை சுற்றிப்பார்த்து விட்டு, மீண்டும் அடுத்த இடத்திற்கு ரயில் செல்கின்றது.

இந்த ரயிலில் சுற்றுலா செல்ல கட்டணம் உணவு தங்கும் வசதி ஆகியவை சேர்த்து மொத்தம் 14 ஆயிரத்து 490 ரூபாய் மட்டும் வசூலிக்கப்படும் என்றும் இந்த பயணம் 14 நாட்களுக்கு உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது 

இந்த ரயிலில் பயணம் செய்பவர்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கிடைக்க வேண்டும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் குறிப்பாக இரண்டு தவணை தடுப்பு ஊசி செலுத்தியவர்கள் மட்டுமே இந்த ரயிலில் பயணம் செய்ய அனுமதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் பயணம் செய்ய இ-டிக்கெட் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top