சம்பளத்தை வேணும்னா குறைச்சுக்கோங்க! அதை மட்டும் செய்ய சொல்லாதீங்க.. ராமராஜன் சொன்ன விஷயம்!

தமிழ் சினிமாவில் மக்கள் நாயகன் என அனைவராலும் போற்றப்படும் நடிகர் ராமராஜன். கிராமத்து மண்வாசனை உடன் கூடிய கதைக்களத்தின் நடித்து மக்கள் மத்தியில் ஒரு நல்ல பெயர் எடுத்தவர்.

கிட்டதட்ட 3 வருடங்களில் 20 ஹிட் படங்களை கொடுத்த ஒரே நடிகர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ராமராஜன். இதைப்பற்றி சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் அவரே ஒரு வருடத்தில் 8 ஹிட் படம் இன்னொரு வருடத்தில் 8 ஹிட் படம் அடுத்து வருடத்தில் நான்கு ஹிட் படம் என மூன்று வருடத்தில் 20 ஹிட் படங்களை கொடுத்திருக்கிறேன் என மிக பெருமையாக பேசினார்.

அதுமட்டுமல்லாமல் இளையராஜாவின் இசை மீது அதிக ஆர்வம் கொண்டவர் ராமராஜன். எம்.ஜி.ஆரின் கொள்கைகளை தீவிரமாக பின்பற்றிய நடிகர்களில் இவரும் ஒருவர். அதனாலயே கலர்ஃபுல்லான சட்டையை இதுவரை அணிந்து தான் ஒரு எம்ஜிஆர் ரசிகன் என்பதை அதன் மூலம் நிரூபித்து வருகிறார்.

தன் படங்களிலும் மது, புகை என எதையுமே காட்டாதவர். அதை இன்றுவரை கடைபிடித்துக் கொண்டு வருகிறார். இந்த நிலையில் ராமராஜன் நடித்த சாமானியன் திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. அதைப்பற்றி பல பேட்டிகள் கொடுத்து வரும் ராமராஜன் அவருடைய உடம்பை பற்றியும் ஒரு தகவலை கூரியிருக்கிரார்.

சில இயக்குனர்கள் அவரை நடிக்க வைக்க வாய்ப்பு கேட்டு வரும்போது எல்லாம் கொஞ்சம் எடையை குறைத்துக் கொள்ள முடியுமா என கேட்பார்களாம். அதற்கு ராமராஜன் சம்பளத்தை வேண்டும் என்றாலும் குறைத்துக் கொள்ளுங்கள். உடல் எடையை மட்டும் குறைக்க சொல்லாதீர்கள். ஏனெனில் என் வாழ்க்கையில் நான் உசிலமணி மாதிரி இருக்க வேண்டியவன்.

அப்பன்டிஸ் ஆபரேஷன் செய்ததன் காரணமாக இந்த அளவுக்கு எடையுடன் இருக்கிறேன். இதற்கு மேலேயும் என்னை வெயிட் குறைக்க சொல்லாதீர்கள் என சொல்லிவிட்டாராம் ராமராஜன்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...