ராமநாதபுரத்தில் பயங்கரம்: பிரபல ரவுடி தலை துண்டித்து கொடூர கொலை..!!!

ராமநாதபுரம் மாவட்டம் செங்கமடை அருகே இருக்கும் வயம் காட்டு பகுதியில் தலை துண்டிக்கப்பட்டு ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் செங்கமடை பகுதியில் வசித்து வருபவர் முத்துப்பாண்டி. இவர் மீது ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் கொலை கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.

மக்களே உஷார்!! 8 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை..!!!

இதற்கிடையில் நேற்று இரவு முதல் அவர் காணவில்லை என அவரது உறவினர்கள் தேடி வந்த நிலையில் இன்று காலை செங்கமடை அருகே இருக்கும் வயம் காட்டு பகுதியில் தலை துண்டிக்கப்பட்டு ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது உடலானது முத்துப்பாண்டி என தெரியவந்துள்ளது. இந்த சூழலில் முத்துபாண்டி முன்பகை காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு காரணங்களால் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திடீர் ஏவுகணை தாக்குதல்!! தலைநகர் கீவ்வில் பதற்றம்..!!!

ரவுடியின் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment