Connect with us

ராமன், லட்சுமணன், பரதன், சத்ருக்ணனின் ராசிகள் தெரியுமா?!

ஆன்மீகம்

ராமன், லட்சுமணன், பரதன், சத்ருக்ணனின் ராசிகள் தெரியுமா?!

தீயவனான ராவணனை அழிக்க உருவான ராம அவதாரத்தில் விஷ்ணு அம்சமான ராமன், ஆதிசேஷன் அம்சமான லட்சுமணன், சங்கு, சக்கரம் முறையே பரதன், சத்ருக்ணனாய் அவதரித்தனர். அவர்கள் குணாதிசயங்களை முன்கூட்டியே கணிக்குமளவுக்கு அவரவர் அவதரித்த நட்சத்திரம் அமைந்தது.

6332f802efd478095d6988c4aec516c6

ராமன் அவதரித்தது புனர்பூச நட்சத்திரத்தில். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சாந்த சொரூபி, மூத்தோர் சொல்கேட்டு நடப்பாங்க. எத்தனை கஷ்டம் வந்தாலும் பொறுமையா பதறாம சமாளிப்பாங்க. தங்கள் முடிவுகளில் நிலையா இருப்பாங்க.

லட்சுமணன் அவதரித்தது ஆயில்யம் நட்சத்திரத்தில்… இந்த நட்சத்திரத்தில் பிறந்தவங்க, கடுமையான சொற்களுக்கு சொந்தக்காரங்க. ஆனா, பாசக்காரங்க. கடுமையான உழைப்பாளி, மாந்த்ரீகம் மாதிரியானவற்றில் ஆர்வம் கொண்டவங்க, திறமைசாலிகள்.

பரதன் அவதரித்தது பூசம் நட்சத்திரத்தில்.. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவங்க பலசாலிகள், புத்திகூர்மையுள்ளவங்க, சுதந்திரமா இருக்க ஆசைப்படுவாங்க. அதேநேரம் அடக்கமா இருப்பாங்க. நியாயம் தர்மத்துக்கு கட்டுப்பட்டவங்க. எடுத்த முடிவில் தீர்க்கமா இருப்பாங்க. கோவமும், ஆத்திரமும் இரு கண்களா கொண்டவங்களா இருப்பாங்க.

சத்ருக்ணன் அவதரித்தது மகம் நட்சத்திரத்தில்.. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவங்க தலைமை பண்பு கொண்டவங்க. கலைகளில் ஆர்வம் கொண்டவங்க. கோவம், ஆத்திரம், பிடிவாத குணம் கொண்டவங்க, மனதில் பட்டதை பேசும் நேர்மையாளர்கள், உற்றார், உறவினரிடம் அதிக பாசம் கொண்டவங்களா இருப்பாங்கன்னு ஜோதிட சாஸ்திரம் சொல்லுது.

அட! ராசிபலனான்னு ஜகா வாங்காதீங்க!

ராமன் பிறந்த புனர்பூசம் நட்சத்திரத்தில் புனர் என்ற சொல்லுக்கு மறுபடியும், திரும்பவும், மீண்டும் என்ரு பொருள். பூசம் என்றால் ஒளி. புனர்பூசம் என்றால் மறு ஒளி என்று பொருள். அதாவது திரும்பவும் வாழ்வில் வந்த ஒளி. இறைவன் மனிதனாக அவதராமாகத் திரும்பி வந்ததைக் குறிக்கும். முன்பும் அவதாரமாக வந்தார். ஆனால் திரும்பிப் போய்விட்டார். அப்படி திரும்பிச் சென்ற ஒளியானது இராமன் உருவில் மறுபடியும் வருவதுதான் இதற்கு உட்பொருள். வாழ்வு இழந்தவரைக் காப்பாற்ற வருகின்ற கடவுள் என்ற பொருளும் கொள்ளலாம்.

புனர்பூசம் என்பது இரட்டை நட்சத்திரம். ஒன்றோடொன்று கூடவே இருக்கும். எல்லா அவதாரங்களிலும் தனியாக வந்த திருமால் இராமனாக வந்த பொழுது கூடவே மனைவியைக் கூட்டிக்கொண்டும் வந்தார். அதைக் குறிப்பால் உணர்த்துவதற்குதான் புனர்பூச நட்சத்திரம் கடக லக்கினத்தில் சீதைக்கும் இராமனுக்கும் திருமணம் நடந்தது.

லட்சுமணனும், சத்ருக்ணனும் சிறிது கால இடைவெளியில் பிறந்த இரட்டையர்கள். கம்பரின் கூற்றுப்படி இலக்குவன் ஆயில்ய நட்சத்திரம், கடகராசி. சத்துருக்கன் மக நட்சத்திரம் சிம்ம ராசி. ஆயில்யத்துக்கு அடுத்தது மக நட்சத்திரம். ஆயில்யம் முடியப் போகின்ற பொழுது இலக்குவன் பிறந்திருக்க வேண்டும். கொஞ்ச நேரத்திலேயே மகம் தொடங்கி சத்துருக்கன் பிறந்திருக்க வேண்டும். இலக்குவனும் சத்துருக்கனும் குணத்தால் வேறுபட்டவர்கள்.

ஆயில்ய நட்சத்திரத்தின் குறியீடு பாம்பு. பாம்பு சீறுவது போலச் சீறுகின்றவன் இலக்குவன். நால்வரில் சீற்றம் மிக்கவன் இலக்குவன். அவன் கோவத்துக்கு ஆளாகாதது ராமரும். சீதையும் மட்டுமே! கைகேயி, கோசலை முதற்கொண்டு ஊர்மிளை, பரதன், அனுமன் வரை எல்லோரிடமும் கோபங்கொண்டான். அவ்வளவு ஏன்?! கடுங்கோபம் கொண்டு சூர்ப்பனகையின் மூக்கறுத்ததால்தான் ராமாயணமே உண்டானது. ஆயில்ய நட்சத்திரத்தை வடமொழியில் அஸ்லேஷா என்பர். அது ஆதிசேடனைக் குறிக்கும். ஆதிசேடனே இலக்குவனாக வந்ததால் பொருத்தமான நட்சத்திரத்தில் பிறந்தான்.

இப்படி அவரவர் குணாதிசயத்தை முன்கூட்டியே உணர்த்தவே பொருத்தமான நட்சத்திரத்தில் இந்நால்வர் அவதரித்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in ஆன்மீகம்

To Top