Connect with us

ராமஜெயம் கொலை வழக்கு: தகவல் கொடுத்தால் ரூ.50 லட்சம் வெகுமதி !!!

15 1465976393 ramajayam murder1 6001 1647684400

தமிழகம்

ராமஜெயம் கொலை வழக்கு: தகவல் கொடுத்தால் ரூ.50 லட்சம் வெகுமதி !!!

ராமஜெயம் கொலை வழக்கு: தகவல் கொடுத்தால் ரூ.50 லட்சம் வெகுமதி !!!

அமைச்சர் கே.என்.நேரு சகோதரர்  ராமஜெயம். இவர் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந் தேதி அதிகாலை நடைபயிற்சிக்காக வீட்டில் இருந்து வெளியே சென்றபோது மர்ம கும்பல் அவரை கடத்தி சென்றுள்ளனர்.

பின்னர் அவரின் கை, கால்களை வாயில் பிளாஸ்திரி ஒட்டி கொடூரமாக கொலை செய்துவிட்டு உடலை திருவளர்சோலை பகுதியில் வீசிச்சென்றனர். இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்தது.

இந்நிலையில் இந்த கொலையின் பின்னணி குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தியும் எந்த வித தடயமும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் இந்த வழக்கில் எந்த வித முன்னேற்றமுன் எட்டப்படவில்லை என ராமஜெயத்தின் சகோதரர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி பாரதிதாசன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி ராமஜெயம் கொலை வழக்கில் அப்போது பணியில் இருந்த ஆறு போலீசார் உள்பட 198 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு உள்ளதாகவும், உயர் அதிகாரிகளையும் விசாரிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே ராமஜெயம் கொலை வழக்கில் விரைவில் குற்றவாளிகளை நெருங்கி விடுவோம் என்றும் கொலையாளிகள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் ரொக்க பரிசு அறிவிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், இந்த வழக்கு தொடர்பான விசாரணையை நீதிபதிகள் ஜூன் 10ம் தேதி ஒத்திவைத்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top