Connect with us

ராமர் பாலம் விவகாரம்… உச்சநீதிமன்றம் ‘பகீர் ‘ கேள்வி!!

Capture 44

செய்திகள்

ராமர் பாலம் விவகாரம்… உச்சநீதிமன்றம் ‘பகீர் ‘ கேள்வி!!

இராமேஸ்வரத்திற்கும் இலங்கையின் மன்னார் தீவுகளுக்கும் இடையே அமைந்திருக்கும் ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடந்த 2015 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்து இருந்தார்.

குறிப்பாக இந்துக்களின் அடையாளமாகவும், நம்பிக்கை சார்ந்த விஷயமாக ராமர் பாலம் காணப்படுவதால் தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையின் வழக்கின் விசாரணை அமர்வனாது இன்று வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள் ராமர் பாலம் தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க தாங்கள் தலையிட வேண்டுமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.

அதோடு ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிப்பது அரசின் கொள்கை விவகாரம்தானே? என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

மேலும், ராமர் பாலம் வழக்கில் பிரமாண பத்திரம் தாக்க செய்ய அறிவுறுத்திய உச்ச நீதிமன்றம் வழக்கின் விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top