Connect with us

விஜயவாடாவில் ராம்கோபால் வர்மாவுக்கு எதிர்ப்பு

Entertainment

விஜயவாடாவில் ராம்கோபால் வர்மாவுக்கு எதிர்ப்பு

தமிழில் உதயம் என்ற ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தவர் ராம்கோபால் வர்மா. தமிழில் ரத்த சரித்திரம், சத்யா2006 உள்ளிட்ட சில படங்கள் வந்துள்ளன. அனைத்துமே சிறப்பான படங்கள்தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

4b63aa018426f0ef08aff4ea301de9c6

தமிழில் இவர் படங்கள் வந்தாலும் இவரது தாய்மொழியான தெலுங்கு மொழிப்படங்களில் நிறைய ஹிட் படங்களை கொடுப்பவர் இவர். ஹிந்தி படங்களிலும் நிபுணத்துவம் வாய்ந்தவர். தெலுங்கை போலவே ஹிந்தியிலும் முன்னணி இயக்குனராவார் இவர்.

இருப்பினும் இவர் சர்ச்சைக்குரிய படங்களையும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை சமூக வலைதளங்களில் அடிக்கடி சொல்லி வருவதாலும் அனைவரும் அறிந்த இயக்குனராவார் இவர்.

இவர் இயக்கியுள்ள லட்சுமியின் என் டி ஆர் படம் ஒரு சர்ச்சைக்குரிய படம் என்றும் அதில் சந்திரபாபு நாயுடுவை அவர் வில்லன் போல் சித்தரித்திருப்பதால் இந்த படத்துக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டது இந்நிலையில் தடையை மீறி இந்த படத்தை 1ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளார் ராம்கோபால் வர்மா.

இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பை விஜயவாடாவில் அவர் நடத்தினார். இதை நடத்த விடாமல் போலீஸ் தடை செய்தது. ராம்கோபால் வர்மாவை அங்கிருந்து வெளியேற்றியது.

ராம்கோபால் வர்மாவுக்கு ஆதரவாக ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியும் களத்தில் குதித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in Entertainment

To Top