Connect with us

காந்தி ஜெயந்தி அன்று கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பேரணி..!!

காங்கிரஸ்

செய்திகள்

காந்தி ஜெயந்தி அன்று கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பேரணி..!!

இன்றைய தினம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் காரியம் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இந்த காரிய கமிட்டி கூட்டத்தில் முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதன்படி ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே பதவி என்றும் ஒருவர் மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு என்றும் காங்கிரஸ் திட்டவட்டமாக தீர்மானத்தை வெளியிட்டது.

ஒருவேளை இரண்டாவது நபர் போட்டியிட விரும்பினால் கட்சியில் 5 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பேரணி நடத்த உள்ளதாக கூறியுள்ளார்.

அதிரடி அறிவிப்பு….. ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கட்சியில் பதவி!!

அதன்படி அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி அன்று கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பேரணி நடத்து கிறார் சோனியா காந்தி. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியா காந்தி இவ்வாறு பேசினார்.

சமூக, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியும், அரசியல் சாசனத்தின் உயிர் நாடியை காக்கும் வகையிலும் பேரணி நடத்தப்படும் என்றும் சோனியா காந்தி கூறியுள்ளார்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top